Jan 29, 2026 - 08:31 PM -
0
சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொலிஸ் துறைக்குச் சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும் சிவில் பாதுகாப்புப் படையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு தேவையான வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பயிற்சித் திட்டங்கள் மற்றும் மனித வள முகாமைத்துவம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

