Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்!

Jan 31, 2026 - 10:45 AM

திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்!
Mobitel Inner 1278

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை செயலிழக்கச் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், மீண்டும் வரச்சொல்லி கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமானது நேற்று (30) திடீரென முடங்கியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உலக அளவில் பிரபலமான இன்ஸ்டாகிராம் செயலியில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் டாப் 10 இல் விராட் கோலியும் ஒருவர். மேலும் அதிக பாலோயர்களைக் கொண்ட விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் 3 ஆவது இடத்தில் கோலி உள்ளார். இவரை மொத்தமாக 27.4 கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். 

இந்த நிலையில் திடீரென அவரது இன்ஸ்டா பக்கம் முடங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடைபெற்றதா அல்லது விராட் கோலி தாமாக தனது அக்கவுண்டை நீக்கிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரது மனைவி அனுஷ்காவின் சமூக வலைதளப் பதிவின் கமெண்ட்ஸ் செக்சனில் விராட் கோலியை மீண்டும் வரச் சொல்லுங்கள் என கருத்துகளை பகிரத் தொடங்கினர். 

தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஏதுவாக லண்டனில் குடியியேறியுள்ள கோலி கிரிக்கெட் போட்டி இருக்கக்கூடிய நாட்களில் மட்டும் இந்தியாவுக்கு வந்து செல்கிறார். ஆரம்ப காலத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த கோலி கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதை நிறுத்திக் கொண்டார். தற்போது அவர் வணிக ரீதியிலான கருத்துகளை மட்டுமே பகிர்ந்து வருகிறார். இதனிடையே திடீரென முடங்கிய கோலியின் கணக்கு சிறிது நேரம் கழித்து மீண்டும் செயல்படத் தொடங்கியதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

Mobitel 1278