Header Logo
SLIC
Rhythams of Lanka
பல்சுவை
விடிந்தால் திருமணம் - தாயுடன் உல்லாசம்!

Jul 15, 2026 - 10:19 AM

விடிந்தால் திருமணம் - தாயுடன் உல்லாசம்!
Mobitel inner

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, மணப்பெண் ஒருவர் தனது துணிச்சலான நடவடிக்கையால், தனது தாயும் வருங்கால கணவரும் இணைந்து திட்டமிட்டிருந்த கோரமான சதித்திட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

தெலுங்கானா மாநிலம், ஒரு புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 வயதான மென்பொருள் பொறியாளர் அனுஷாவுக்கும், ரவி (28) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அனுஷாவின் தந்தை ஜப்பர் சிங் இறந்த நிலையில், அவரது இரண்டாம் மனைவியான பத்மா (45) தனது வளர்ப்பு மகளான அனுஷாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ரவிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

திருமணத்திற்காக உறவினர்கள் சூழ மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், மணப்பெண் அனுஷாவுக்கு தனது தாயார் பத்மாவும், வருங்கால கணவர் ரவியும் நடந்துகொண்ட விதம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், ரவியின் தொலைபேசியை சாக்குப்போக்கு சொல்லி வாங்கிய அனுஷா, அறையை உள்பூட்டிவிட்டு ஆய்வு செய்தார். 

தொழில்நுட்ப அறிவுகொண்ட அனுஷா, தொலைபேசியில் நீக்கப்பட்டிருந்த தரவுகளை மீட்டெடுத்தபோது, அதிர்ச்சியில் உறைந்து போனார். அதில், தனது தாயார் பத்மாவும், ரவியும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் இருந்தன. 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அனுஷா, உடனடியாக உறவினர்களை அழைத்து உண்மையை வெளிப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மணமகன் ரவியை சரமாரியாகத் தாக்கினர். மண்டபமே போர்க்களமாக மாறியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

பொலிஸாரின் தீவிர விசாரணையில், பல ஆண்டுகளாக பத்மாவும் ரவியும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. 

அனுஷாவின் தந்தைக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரிக்கவும், தொடர்ந்து ரவியுடன் தொடர்பில் இருக்கவும் திட்டமிட்ட பத்மா, தனது மகளையே ரவிக்கு மணம் முடிக்க சதி செய்தது அம்பலமானது. 

இந்தக் கொடூரத் திட்டத்தை முறியடித்த மணப்பெண் அனுஷாவின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பத்மா மற்றும் ரவியிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பாக மணப்பெண் காட்டிய விழிப்புணர்வு, ஒரு பெரிய ஆபத்தில் இருந்து அவரைப் பாதுகாத்துள்ளது.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara