Header Logo
SLIC
செய்திகள்
நீர்கொழும்பு சிறை கைதிகள் அதிகாரிகளை தாக்கிய கூரிய ஆயுதங்கள் மீட்பு

Jul 11, 2026 - 11:11 PM

நீர்கொழும்பு சிறை கைதிகள் அதிகாரிகளை தாக்கிய கூரிய ஆயுதங்கள் மீட்பு
Mobitel Inner 1278
EDEX Inner

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் அதிகாரிகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொல்லுகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விசாரணைகளின் போது, கைதிகள் சிறைச்சாலை சமையலறைக்குள் புகுந்து அங்கிருந்த தேங்காய்களையும் எடுத்து வந்து அதிகாரிகளைத் தாக்கியது தெரியவந்துள்ளது. 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 

இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ள நிலையில், சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கூர்மையான ஆயுதங்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொல்லுகளும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் பிற சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால், அந்த சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், புதிய குழப்ப நிலையும் உருவாகியுள்ளது. 

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளை, அந்த சிறைச்சாலைகளில் இருந்த ஏனைய கைதிகள் தாக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278