Header Logo
Mogo Academy

செய்திகள்
எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடி நீக்கம்? – புதிய சுற்றறிக்கை வெளியானது!

Jul 7, 2026 - 01:57 PM -

0

எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடி நீக்கம்? – புதிய சுற்றறிக்கை வெளியானது!
Mobitel inner

ஆற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண முதன்மைச் செயலாளர்கள், விசேட செலவீன அலகுகள், ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை, மார்ச் முதலாம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையில் வழங்குவதற்கு, ஏப்ரல் 2 ஆம் திகதி அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், புதிய சுற்றறிக்கையின் மூலம் அந்தச் சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு தற்போதைய எரிபொருள் விலையின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara