Header Logo
Mogo Academy

செய்திகள்
கொழும்பில் மேலும் பல பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

Jul 3, 2026 - 02:54 PM -

0

கொழும்பில் மேலும் பல பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு
Mobitel inner

கொழும்பின் மேலும் சில பிரதேசங்களுக்கு நாளை (04) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

நாளை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

இதற்கு முன்னர் நீர் வழங்கல் சபை வெளியிட்ட அறிவிப்பில், கொழும்பு 01 முதல் 15 வரையிலான பகுதிகள் மற்றும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹானை, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவை, ஐ.டி.எச் (IDH), கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவலை, மஹரகம, பொரலஸ்குமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களுக்கு நாளை காலை 9.00 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, இந்த அனைத்துப் பிரதேசங்களுக்கும் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. 

மின்சார விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதனாலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara