Header Logo
Mogo Academy

வணிகம்
வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களில் புதுமைகளை வழங்கி வரும் ஹட்ச் நிறுவனம், International Fast Mode Awards நிகழ்வில் ‘உலகளாவிய அங்கீகாரத்தை’ சம்பாதித்துள்ளது

Feb 2, 2026 - 11:51 AM -

0

வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களில் புதுமைகளை வழங்கி வரும் ஹட்ச் நிறுவனம், International Fast Mode Awards நிகழ்வில் ‘உலகளாவிய அங்கீகாரத்தை’ சம்பாதித்துள்ளது
Mobitel inner

அண்மையில் இடம்பெற்ற International Fast Mode Awards விருதுகள் நிகழ்வில் வளர்ச்சி என்ற பிரிவின் கீழ் மதிப்புமிக்க ‘Customer Champion’ விருதை ஹட்ச் நிறுவனம் சம்பாதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்கின்ற அனுபவங்களை முற்றிலும் மாற்றியமைத்து, அதிநவீன தொழில்நுட்பங்களை திறன்மிக்க வழியில் கைக்கொண்டு மிகச் சிறந்த மதிப்பை அவர்களுக்கு வழங்குவதில் ஹட்ச் நிறுவனம் முன்னிலை வகித்து வருவதைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஹட்ச் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், அதியுச்ச மட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்களை மேம்படுத்துவதை சிறப்பாகப் பின்பற்றி, பெருந்தரவு (big data) தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவால் (AI) முன்னெடுக்கப்படும் வாடிக்கையாளர் குறித்த ஆழமான புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் மூலமாக புதிய சர்வதேச தரஒப்பீட்டை நிலைநாட்டியுள்ளது. அதேசமயம், வலுவான மற்றும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் முகாமைத்துவ வியூகத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கான நேரடி அனுபவங்களையும் சிறப்பான மட்டத்தில் பேணி வருகின்றது. இந்த வியூகத்தின் கீழ் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடுகளைப் பேணவும், அவர்கள் உள்ளடக்கப்படுவதை 100% உறுதி செய்யவும் பரந்த வகைப்பட்ட பிரத்தியேக டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் அல்லாத வழிமுறைகள் மூலமாக உடனுக்குடன் செயல் நடவடிக்கைகளுடன் அவர்களுக்கான அனுபவங்கள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் நலனுக்கு முன்னுரிமையளிப்பதில் மிக நீண்ட காலமாக நன்மதிப்பைச் சம்பாதித்து, இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு நாமமாக ஹட்ச் திகழ்ந்து வருகின்றது. வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் அவர்களுடனான ஈடுபாடுகளை வளர்த்தல் குறித்த புதிய தேடலில் ஹட்ச் அண்மைக்காலமாக ஈடுபட்டுள்ளது. உண்மையான 

அனுபவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மாற்றியமைத்தல், வாடிக்கையாளர்களின் சிரமங்களை இனங்காணுதல், மதிப்பைத் தோற்றுவிப்பதற்கு எது தேவைப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளல் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ப்பான ஆழமான புரிந்துணர்வுகளை எவ்வாறு அவர்களுக்கு சிறந்த பலனை விளைவிக்கும் நடவடிக்கைகளாக மாற்றியமைத்தல் ஆகியன இத்தேடலில் அடங்கியுள்ளன. இது தொடர்பான ஒட்டுமொத்த அணுகுமுறையையும் ஹட்ச் நிறுவனம் புதுப்பித்துள்ளதுடன், வாடிக்கையாளர்கள் முதன்முதலில் தொடர்புபடும் புள்ளியிலிருந்து ஆரம்பித்து, அவர்கள் நிறுவனத்துடன் வாடிக்கையாளர்களாக இணைந்திருக்கும் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் சீரான மற்றும் சிறப்பான அனுபவத்தை அவர்கள் பெற்றுக்கொள்வதை உள்ளடக்கியுள்ளது. 

வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் ஒட்டுமொத்த அனுபவங்கள், செயல்திறன் மிக்க வழிகாட்டல், சேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள வழிவகுத்தல், வாடிக்கையாளர்களுக்கு உகந்த திட்டங்களை அறிமுகப்படுத்தல், வாடிக்கையாளர்களுக்கு உகந்த நம்பிக்கை அங்கத்துவத்திட்ட சலுகைகளை வழங்குதல், ஒவ்வொரு வாடிக்கையாளரின் குணாதிசயங்களுக்கும் பொருந்தும் உதவிச் சேவைப் பொறிமுறைகளை பின்பற்றுதல், மற்றும் இறுதியில் மதிப்பு தோற்றுவிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வலுப்படுத்தல் ஆகியன வளர்ச்சிக்கான இந்த புதிய வியூகத்தில் அடங்கியுள்ளன. 

உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் புகழ்பெற்ற நிபுணர்களின் ஒத்துழைப்பின் மூலமாக உலகத்தரம் வாய்ந்த இந்த புதுமையான மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வாடிக்கையாளர்களைத் தொடர்ந்தும் தக்க வைத்தல், மற்றும் வர்த்தகநாம மதிப்பு போன்ற அளவீட்டு அடிப்படையிலான மகத்தான பெறுபேறுகளும் அதன் பிரதிபலிப்பாகக் காணப்படுகின்றன. 

ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் இந்த அங்கீகாரம் குறித்து கருத்து வெளியிடுகையில், “வாடிக்கையாளர்கள் என்பவர்கள் ஒரே பிரிவினராகக் கருதப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டியவர்களாக அல்லாமல், தனித்தனியாக ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறையுடன் ‘வாடிக்கையாளர்களுக்கு முதலிடம்’ என்ற எமது உள்ளார்ந்த நோக்கத்தை இந்த அங்கீகாரம் சிறப்பாக உறுதிப்படுத்தியுள்ளது. கருணையை மையமாகக் கொண்டு எமது அணுகுமுறை மாற்றம் பெற்றுள்ளதுடன், தொழில்நுட்பமானது ஒரு இலக்காக அல்லாது ஒரு ஊக்கியாக துணைபுரிந்து, பிரமாண்டமான அளவில் செயல்படும் மதிப்புப் பொறிமுறையொன்றைத் தோற்றுவிக்க எமக்கு இடமளிக்கின்றது. மக்கள் மத்தியில் நீடித்து நிலைபெறும் நம்பிக்கையை ஏற்படுத்தி, நற்பயனையும், உண்மையான மதிப்பையும் தோற்றுவிக்கின்ற அனுபவங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் ஹட்ச் நிறுவனம் ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.”


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara