Header Logo
Vallibel FD
Selan Bank
இந்தியா
தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான த.வெ.க.வால் மட்டுமே முடியும் - விஜய் பரபரப்பு பேச்சு

Feb 2, 2026 - 02:15 PM

தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான த.வெ.க.வால் மட்டுமே முடியும் - விஜய் பரபரப்பு பேச்சு
Mobitel Inner 1278

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். 

விழாவில் விஜய் பேசியதாவது, 

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இன்று 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். இந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளோம். அதற்கு நீங்களும், கோடிக்கணக்கான மக்களும் தான் காரணம். 

நீங்கள்தான் எனக்கு பலம். உங்களை நம்பித்தான் நானும் இருக்கிறேன். கட்சியும் இருக்கிறது. கட்சியில் உள்ள தோழர்கள், தொண்டர்களுக்கு தலைமைத் தொண்டனான எனது வாழ்த்துகள். 

1977 ஜூன் மாதம் எம்.ஜி.ஆர். ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது, அண்ணா இருந்த இடத்தில் இப்படி ஒருவர் அமர்ந்துவிட்டாரே என்று கண்ணீர் வடித்தார். அதற்காக, தொடங்கப்பட்டதுதான் அ.தி.மு.க. 

இன்றைக்கு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர் அமர்ந்துவிட்டாரே என்று தமிழக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் நாம். சிலர் இதை கேட்டவுடன் கொந்தளிப்பார்கள். நாம் கவலைப்படக்கூடாது. கொந்தளிப்பதுதான் அவர்கள் வேலை. 

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது அரசியல் அரிச்சுவடி தெரியாது, அட்டை கத்தி என்று விமர்சித்தனர். அதே வாய்தான், இன்றைக்கு நம்மை பற்றி, இவர் வெளியிலேயே வரமாட்டார். பேட்டி கொடுக்கமாட்டார். டெல்லியில் இருந்து அவருக்கு அழுத்தம் வருகிறது என்று சொல்கிறார்கள். இதை எல்லாம் இந்த மக்கள் அமைதியாக பார்த்து வருகிறார்கள். 

அரசியலில் கொட்டை போட்டவர்களுக்கும், கோட்டை என்பது பகல் கனவாகும். டெக்னாலஜி எங்கேயோ போகுது. உங்கள் டெக்னிக்கையாவது மாற்றுங்கள். அவர்கள், காமராஜரையும் விட்டுவைக்காமல் விமர்சித்தனர். 

நாம் ஏதும் சொன்னால், 50 ஆண்டுகளுக்கு முந்தைய தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தகர டப்பாவை உருட்டும் பவள விழா பாப்பா. ஆனாலும், நாம் சொல்வோம். அவர்களை எதிர்க்கும் தில் நமக்கு உள்ளது. மக்களுடைய ஒரே பிரதிநிதி நாம்தான். 

இப்போது திருவள்ளுவர் இருந்திருந்தால், "அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முகற்றே உலகு" என்று எழுதியிருப்பார். இது ஒரு கற்பனைதான். 

இப்போது, மும்முனை போட்டி, நான்குமுனை போட்டி என்கிறார்கள். மக்கள் சக்தியுடன் நாம் ஒரு பக்கம். தி.மு.க. ஒரு பக்கம். பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும், தி.மு.க.வை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான த.வெ.க-வால் தான் முடியும். 

நம்மை விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். இதை பார்க்கும்போது, முறையாக அவர் வருவார். ஓட்டு போடும் அன்றைக்கு வீட்டில் இருந்து ஒவ்வொரு விஜய்யும் பூத் பூத்தாக காலையில் வந்து நிற்பார்கள். அப்போது தெரியும். ஏண்டா இந்த விஜயை கூப்பிட்டோம் என்று. 

நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் விடமாட்டேன் என்கிறீர்கள். கருத்து கணிப்பு என்று வெளியிடுகிறார்கள். சிலர் உண்மையாக, சிலர் கடுப்பில் வெளியிடுகின்றனர். 

கடுப்பில் வெளியிடுபவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். வீடுவீடாக சென்று பாருங்கள், வீட்டுக்கு வீடு த.வெ.க. இருக்கும். எனவே, ரப்பரை வைத்து அழித்து முதலில் இருந்து கருத்து கணிப்பை தொடங்குங்கள். 

2 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்-அமைச்சர், கட்சி நிர்வாகிகள் நடவடிக்கையால் தூக்கம் வரவில்லை என்று கூறினார். என்றைக்காவது அவருக்கு தூக்கம் வந்தால், அப்படி தூங்கும்போது, அவரை எழுப்பி யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்குத்தான் என்று சொல்வார். 

அப்படி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களில்தான் த.வெ.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறுகிறார்கள். விசில் சின்னம் ஊதாத ஊரே இல்லை. இங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது. 

எங்க அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை ஓட்டுபோடுவதை யாரும் தடுக்க முடியாது. ரத்த சொந்தம் உள்ளவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. 

தீய சக்தியை வீழ்த்த தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும். டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் நாம்தான். அதை மனதில் வைத்து இன்னும் நன்றாக உழையுங்கள். 

வேட்பாளருக்கு ஒற்றுமையாக இருந்து பகுதி, கழகம் வரை வேலை செய்யுங்கள். மற்றதை மக்களுடன் சேர்த்து நான் பார்த்துக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டுடைய அரசியலில் இருந்து தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். த.வெ.க. ஆளுங்கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மளோடு மக்கள் இருக்காங்க. வேறு என்ன வேண்டும். உறுதியாக இருங்கள். வெற்றி நிச்சயம் என்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278