Header Logo
Mogo Academy

வணிகம்
ஜனசக்தி லைஃப் முக்கிய தலைமைத்துவ நியமனங்களுடன் நிர்வாகக் குழுவை வலுப்படுத்துகிறது

Feb 2, 2026 - 05:13 PM -

0

ஜனசக்தி லைஃப் முக்கிய தலைமைத்துவ நியமனங்களுடன் நிர்வாகக் குழுவை வலுப்படுத்துகிறது
Mobitel inner

காப்புறுதித் துறையில் முன்னணி நாமமும், JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமுமான ஜனசக்தி லைஃப், அதன் நிர்வாகக் குழுவிற்கு இரு மதிப்புமிக்க தலைவர்களை நியமித்துள்ளதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இதன் அடிப்படையில் திருமதி. நாமலி A. சில்வா அவர்கள் பிரதம வணிக அதிகாரியாகவும் திரு. சங்கர் தர்மரத்ன அவர்கள் பிரதம டிஜிட்டல் அதிகாரியாகவும் பொறுப்பேற்கின்றனர். 

வணிக வளர்ச்சியை விரைவுபடுத்துதல், சந்தை இருப்பை விரிவுபடுத்துதல் மற்றும் நிறுவனம் முழுவதும் பரந்த டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகிய இலக்குகளிற்கான ஜனசக்தி லைஃப்பின் அர்ப்பணிப்பிற்கு இம் மூலோபாய நியமனங்கள் குறிப்பிடத்தக்க சான்றாகும். 

திருமதி. நாமலி A. சில்வா அவர்கள் வங்கியியல், நிதி மற்றும் காப்புறுதித் துறைகளில் 36 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட திறமையான சந்தைப்படுத்தல் மற்றும் வணிக நிபுணர் ஆவார். இவர் கொமர்ஷல் வங்கி, Nationwide Building Society (UK), Lloyds Bank (UK), செலான் வங்கி, மக்கள் வங்கி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் பல்வேறு சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். இவர் இறுதியாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம வணிக அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது பரந்த நிபுணத்துவமும் மூலோபாய நுண்ணறிவும் ஜனசக்தி லைஃப்பின் வெற்றிப் பயணத்தில் புதிய உயரங்களை எட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திரு. சங்கர் தர்மரத்ன அவர்கள் வங்கியியல், தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்துடன் ஜனசக்தி லைஃப் நிறுவனத்தில் இணைகிறார். அண்மையில் ஹட்டன் நேஷனல் வங்கியின் டிஜிட்டல் சேவைகளின் தலைவராகப் பணியாற்றிய அவர், டயலொக் ஆக்சியாட்டா பிஎல்சி மற்றும் றோயல் விஷன் சிங்கப்பூர் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றில் முக்கிய தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். மேலும் அவர், தேசிய கொடுப்பனவு ஆணைக்குழு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் டிஜிட்டல் முன்னேற்றத் திட்ட வரைபடக் குழுவுடனான தனது பணியின் ஊடாக தேசிய அளவிலான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் பங்களித்துள்ளார். ஜனசக்தி லைஃப்பின் டிஜிட்டல் உத்தியை முன்னெடுப்பதிலும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் புத்தாக்கங்களை ஆதரிப்பதிலும் அவரது நிபுணத்துவம் முக்கிய பங்கு வகிக்கும். 

எங்கள் தலைமைத்துவ குழுவிற்கு திருமதி.சில்வா மற்றும் திரு.தர்மரத்ன ஆகியோரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என ஜனசக்தி லைஃப்பின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கூறினார். மேலும் அவர், எங்கள் மூலோபாய இலக்குகளை அடைவதிலும், வாடிக்கையாளர்களுக்கு தனித்தன்மையான மதிப்பை வழங்குவதிலும் நாம் முன்னெடுக்கும் முயற்சிகளில் அவர்களின் ஒன்றிணைந்த அனுபவமும் தலைமைத்துவமும் மிக முக்கியமானதாக இருக்கும். என்றார். 

காப்புறுதித் துறையின் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, ஆற்றலுடைய, தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைமைத்துவக் குழுவை உருவாக்குவதில் ஜனசக்தி லைஃப் தொடர்ந்து உறுதியாக உள்ளது. 

ஜனசக்தி லைஃப் பற்றி 

1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara