Header Logo
வணிகம்
INSEE சங்ஸ்தா சீமெந்து 2025ஆம் ஆண்டில் இலங்கையின் அதிக விருதுகள் பெற்ற சீமெந்து வர்த்தக நாமமாக முடிசூட்டப்பட்டுள்ளது

Feb 2, 2026 - 05:24 PM

INSEE சங்ஸ்தா சீமெந்து 2025ஆம் ஆண்டில் இலங்கையின் அதிக விருதுகள் பெற்ற சீமெந்து வர்த்தக நாமமாக முடிசூட்டப்பட்டுள்ளது
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையின் ஒரே உள்நாட்டு வர்த்தக நாமமான INSEE சங்ஸ்தா சீமெந்து, 2025ஆம் ஆண்டில் தொழில்துறை விருதுகளில் ஆதிக்கம் செலுத்தியது. இதன் போது, தரம், நிலைபேறாண்மை மற்றும் புத்தாக்கத்திற்கான உயர் கௌரவங்களைப் பெற்று இலங்கையின் முன்னணி மற்றும் சிறப்பாகச் செயல்படும் சீமெந்து வர்த்தக நாமமாக அதன் அந்தஸ்தை வலுப்படுத்தியது. 

INSEE சங்ஸ்தா மீண்டும் ஒருமுறை, SLIM Kantar மக்கள் விருதுகளில், ‘ஆண்டிற்கான மக்களின் வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தக நாம’ விருதை வென்றது. INSEE தொடர்ச்சியாக 14ஆவது முறையாக இவ் விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த அங்கீகாரம் வர்த்தக நாமத்தின் ஒப்பிடமுடியாத நிலைத்தன்மையை நிரூபிக்கிறது. இது INSEE சங்ஸ்தா நிறுவனத்தை இலங்கையின் கட்டுமானத் துறையில் மறுக்கமுடியாத தலைவராக நிலைநிறுத்துவதுடன் நாடெங்கிலும் கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், பொறியியலாளர்கள், மேசன்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் அதன் மீதான நீடித்த நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க இச் சாதனைக்கு மேலதிகமாக, INSEE சங்ஸ்தா, Ceylon Institute of Builders (CIOB) ஆல் ஆண்டின் நிலைபேறான சீமெந்து வர்த்தக நாமமாக' அங்கீகரிக்கப்பட்டது. இது தொழில்நுட்ப சிறப்புடன் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள கட்டுமான தீர்வுகளை வழங்கும் வர்த்தக நாமத்தின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், இது People’s Pinnacle – Best Cement Brand of the Year 2025’ விருதையும் பெற்றது. இது செயல்திறன் மற்றும் புத்தாக்கத்திற்கான தொழில்துறையின் அளவுகோலாக அதன் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தியது. 

இவ் விருதுகள், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும், எதிர்காலத்தை நோக்கிச் சிந்திக்கும் நிறுவனமாக அதனை வலுப்படுத்துவதோடு, நாட்டின் மிகவும் நம்பகமான சீமெந்து வர்த்தக நாமமாக சங்ஸ்தாவின் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது. 

ஒருங்கிணைந்த சீமெந்து தொழிற்சாலையை கொண்ட நாட்டின் ஒரே உற்பத்தியாளராக, INSEE அதன் முழு உற்பத்தி செயல்முறையிலும் கடுமையான தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. 

INSEE சீமெந்து நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் குணவர்ணசூரிய கருத்து தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரங்கள் INSEE சங்ஸ்தா நிறுவனத்தின் தரம், நிலைத்தன்மை மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சக்திவாய்ந்த அங்கீகாரமாகும். 2025ஆம் ஆண்டில் அதிக விருதுகளைப் பெற்ற சீமெந்து வர்த்தக நாமமாக விளங்குவதில் நாங்கள் பெருமை கொள்வதோடு இலங்கை மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் சமூகங்களுக்கும் ஒப்பிடமுடியாத மதிப்பை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தும் அதே வேளை இவ் விருதுகள், எமது தயாரிப்புக்களை தொடர்ந்து மேம்படுத்தவும், நிலையான கட்டுமான நடைமுறைகளில் கவனம் செலுத்தவும், முன்னோடி முயற்சிகளை மேற்கொள்ளவும் எங்களை ஊக்குவிக்கிறது. ” என்றார். 55 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், INSEE சங்ஸ்தா தொடர்ந்து தொழில்துறை தரங்களை நிர்ணயித்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற கலப்பு சீமெந்தை இலங்கையில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் இதுவாகும். மேலும், உள்ளூர் கட்டுமானத் துறைக்கு தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 2021இல் இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனத்துடன் (SLSI) இணைந்து, INSEE சங்ஸ்தா, நாட்டில் முதல் முறையாக Portland Composite Cement (PCC)ஐ அறிமுகப்படுத்தியது. இது பல்வேறு கட்டுமானப் பயன்பாடுகளுக்கு உயர் வலிமை மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது. இப் புதுமை, பசுமையான கட்டுமான நடைமுறைகளை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறித்தது. 

இந் நிறுவனம் நிலைத்தன்மைக்கான பாதையை வகுத்து தனது துறையில் பல்வேறு முதன்மையான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இதில் National Cleaner Production Centre (NCPC) இடமிருந்து EcoLabel சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் சீமெந்து நிறுவனம், அதன் முழு தயாரிப்பு தொகுப்பிற்கும் Environmental Product Declarations (EPD) ஐ பெற்ற முதல் சீமெந்து உற்பத்தியாளர் மற்றும் 2024இல் Green Building Council of Sri Lankaஇன் மதிப்புமிக்க 5-நட்சத்திர கிரீன் லேபிள் சான்றிதழைப் பெற்ற நிறுவனம் ஆகிய சாதனைகள் உள்ளடங்கும். 

இப் பாராட்டுக்கள் அனைத்தும் ஒருங்கே, தொழில்நுட்பச் சிறப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் இலங்கையின் கட்டுமானத் துறையின் மறுக்கமுடியாத தெரிவாக INSEE சங்ஸ்தா சீமெந்தின் ஒப்பற்ற தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. உள்நாட்டு சீமெந்து வர்த்தக நாமமாக இலங்கையர்களின் நம்பிக்கையுடன் குறைந்த கார்பன் தடத்துடன், எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டுமானச் சூழலை நோக்கி நிறுவனம் தொடர்ந்து வழிநடத்தும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278