Header Logo
SLIC
இந்தியா
3 குழந்தைகளை தூக்கிலிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடம்

Feb 2, 2026 - 06:11 PM

3 குழந்தைகளை தூக்கிலிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடம்
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 28 வயது பெண், தனது 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்து தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கர்நாடக மாநிலம் பாகல்கோட் பதாமி தாலுகாவில் உள்ள கிராமம் ஹிரேமுச்சல்குட்டா கிராமம். இந்த கிராமத்தில் ரூபா ஹனுமன்த் கவுடர் (வயது 28) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 5, 4, மற்றும் 2 இரண்டு வயதில் மூன்று குழந்கைள் இருந்தன. 

இவருக்கும் இவரது கணவர் மற்றும் மாமியாருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெறு வழக்கம். சம்பவத்தன்று இந்த சண்டை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 

இந்த சண்டையால் விரக்தியான ரூபா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். 

அதன்படி மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கில் போட்டு கொன்றுள்ளார். அதன்பின் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விசம் அருந்தியுள்ளார். ஆனால், ரூபா உயிர்ப்போகவில்லை. 

உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது என்ற எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாய் பதிய வைக்கப்பட வேண்டும். தற்கொலைக்கான உளவியல் காரணங்கள் சில உள்ளன. 

அதன் முதன் நிலையானது கொலை செய்ய விரும்புவது. 2-வதாக கொலை செய்யப்படுவதை விரும்புவது. 3-வதாக தன்னையே கொலை செய்து கொள்வது. ஒருவர் மீது ஏற்படும் வெறுப்பில் அவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் போது கொலையாக மாறுகிறது. அல்லது, நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தில் தற்கொலையை தேடிக் கொள்கின்றனர். 

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை நோக்கி மனிதர்கள் தங்களின் மனதை கொண்டு செல்வது கிடையாது. 

சில பெரிய தலையீடுகள் தற்கொலையை பெருமளவு தடுத்துள்ளன. 

தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்தல், குழப்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கிடைக்க செய்தல் போன்றவற்றால் தற்கொலை மற்றும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278