Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
பயணப்பையிலிருந்து நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Feb 3, 2026 - 01:32 PM

பயணப்பையிலிருந்து நிர்வாண நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு
Mobitel Inner 1278

இந்தியாவில் பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் காய்கறி சந்தை பகுதியில், சிகப்பு நிற பயணப்பை ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். 

பின்னர் அந்த பயணப்பையை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.​ 

இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர். 

அந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கெமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை பகுதியில், பயணப்பையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278