Header Logo

வடக்கு
நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்ப்போம்!

Feb 4, 2026 - 09:08 AM -

0

நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்ப்போம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

 

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர் விடுத்துள்ள நாட்டின் 78 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

சுதந்திரம் என்பது வெறுமனே கடந்த காலத்தை நினைவுகூரும் ஒரு சம்பிரதாய நிகழ்வு மட்டுமல்ல, அது எமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்புமாகும். இனம், மதம், மொழி என்ற வேற்றுமைகளைக் கடந்து, ஒற்றுமை, சமாதானம் மற்றும் செழிப்பில் வேரூன்றியதொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியை நாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். 

நாட்டின் வரலாற்றிலும், அதன் எதிர்கால வளர்ச்சியிலும் வடக்கு மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கின் வளம் என்பது முழு நாட்டின் செழிப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. எனவே, வடக்கு மாகாணத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனது வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றுவதோடு, அவர்களுக்கான கௌரவமான வாழ்வாதாரத்தையும், சமத்துவமான உரிமைகளையும் உறுதி செய்வது எமது கூட்டுப் பொறுப்பாகும். 

நேர்மையான நிர்வாகம், ஊழலற்ற அரச சேவை மற்றும் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் எமது நாடு புதியதொரு தடத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றத்தின் ஊடாக, வடக்கு மாகாணத்தையும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்ப்போம்.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title