Header Logo

வடக்கு
யாழில் 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Feb 4, 2026 - 04:36 PM -

0

யாழில் 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்!

78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஐக்கிய இளைஞர் இயக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மும்மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் ஒன்றாக இணைந்து, தேசியக் கொடியினை ஏந்தியவாறு யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிலிருந்து நடைபவனாகவும், வாகனப் பேரணியாகவும் இக்கொண்டாட்டத்தைப் பெருமையுடன் முன்னெடுத்தனர். 

இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளின் அணிவகுப்பு இப்பேரணிக்கு மேலும் மெருகூட்டியது. சிறுவர்களும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி மிகுந்த உற்சாகத்துடன் இதில் பங்கேற்றனர். 

காலை 10:00 மணிக்கு யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, பண்ணை வீதியூடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய வீதியை வந்தடைந்து, பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை அடைந்து நிறைவு பெற்றது.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title