Feb 5, 2026 - 07:52 AM -
0
இந்தியாவின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலானது அதிக செல்வம் கொழிக்கும் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
அதன் ஒரு நாள் உண்டியல் வருமானம் தொடர்பான தகவல்கள் தற்போது வௌியாகி பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் (3) மாத்திரம் 69 ஆயிரத்து 389 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வௌியிடப்பட்டுள்ளது.
அவர்களில் 20 ஆயிரத்து 247 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
அன்றைய தினத்தில் மாத்திரம் ஒருநாள் உண்டியல் காணிக்கை 3 கோடியே 72 லட்சம் இந்திய ரூபாய் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்டியல் காணிக்கை மட்டுமல்லாமல், இன்னும் பல வழிகளில் இந்த கோவிலுக்கு வருமானம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

