Header Logo
SLIC
பல்சுவை
ஆபாச வீடியோ தேடியவருக்கு அதிர்ச்சி!

Feb 9, 2026 - 10:29 AM

ஆபாச வீடியோ தேடியவருக்கு அதிர்ச்சி!
Mobitel Inner 1278
EDEX Inner

சீனாவில் நபர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அந்த தளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

அந்த வீடியோ, அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது. 

முன்பு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தபோது அந்த காட்சிகள் அவர்களுக்கு தெரியாமல் ஸ்விச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட 'ஸ்பை கேமரா' மூலம் படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது. 

இது குறித்து அவர் பொலிஸில் புகார் அளித்தார். விசாரணையில், சீனா முழுவதும் பல ஹோட்டல் அறைகளில் இது போன்ற ரகசிய கேமராக்களைப் பொருத்தி, அதன் மூலம் தம்பதிகள் மற்றும் காதலர்களின் அந்தரங்க வீடியோக்கள் படமாக்கப்பட்டு கள்ளச்சந்தையில் ஆபாச இணையதளங்களுக்கு விற்கும் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கபட்டது. 

மேலும், இந்தக் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகள், கட்டணம் செலுத்திப் பார்க்கும் சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. 

ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு சீன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278