Header Logo
SLIC
மலையகம்
தேயிலைத் தோட்டத்தில் வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை!

Feb 10, 2026 - 11:23 AM

தேயிலைத் தோட்டத்தில் வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை!
Mobitel Inner 1278
EDEX Inner

பொகவந்தலாவ, கொட்டியாகலை மேல் பிரிவு 05 ஆம் இலக்க தேயிலை மலையில் பன்றிக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் பாரிய சிறுத்தை ஒன்று சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சிறுத்தையின் சடலத்தை இனங்கண்ட தோட்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொகவந்தலாவ பொலிஸார் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதேவேளை குறித்த சிறுத்தை உணவு தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த கம்பி வலை விரித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

உயிரிழந்த சிறுத்தை 04 அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278