Header Logo

செய்திகள்
மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

Feb 10, 2026 - 05:29 PM -

0

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய நிலைமை குறித்து மீன் வியாபாரிகள் தெரிவிக்கையில், 

சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இதன் விளைவாக மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதற்கமைய, இன்று (10) பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் 3,600 ரூபாவுக்கும் பாறை மீன் 3,000 ரூபாவுக்கும் கெலவல்லா மீன் 2,700 ரூபாவுக்கும் பலயா மீன் 2,000 ரூபாவுக்கும் மற்றும் லின்னா மீன் 900 ரூபாவுக்கும் மற்றும் சாளையா மீன் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மீனவர்களின் இந்தப் போராட்டம் மேலும் நீடித்தால், வரும் நாட்களில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title