Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (11.02.2026)!

Feb 11, 2026 - 11:50 AM

இன்றைய ராசிப்பலன் (11.02.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (11) விருச்சிக ராசியில் அனுஷம் பின்பு கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கிரகங்களின் அமைப்பால் ஆதி யோகம் ஏற்படுகிறது. இன்று மிதுனம், தனுசு ராசிக்கு சாதகமான பலன் கிடைக்கும். இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று குடும்பம் பொறுப்புக்கள் நிறைவேற்றுவது மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். இன்று எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்வது அவசியம். உங்கள் சோம்பேறித்தனம் தடையாக அமையும். இருப்பினும் சுறுசுறுப்பான திட்டமிட்ட செயல்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். பணியிடத்தில் சரியான அணுகுமுறை சக ஊழியர்களிடமிருந்து மரியாதை மற்றும் ஆதரவை பெற்றுத்தரும். மாலை நேரத்தில் சில சச்சரவுகள் என வாய்ப்பு உண்டு. அதனால் நிதானமான செயல்படுத்த தேவை. 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்கள் கடினமான சூழ்நிலை கூட இனிமையாக மாற்றம் வாய்ப்பு உண்டு. உங்களுடைய கலைத்திறன் வெளிப்படும். பணியிடத்தில் அல்லது உங்கள் வீட்டில் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவை பிறரிடம் பெறுவீர்கள். இன்று நாளை இரண்டாம் பகுதியில் உங்கள் பிள்ளைகளிடமிருந்து நம்பிக்கை கூறிய மற்றும் மகிழ்ச்சியான சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிக்க முடியும். பணம் தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்படவும். 

மிதுனராசி பலன் 

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று எதிரிகள் கூட உங்களைப் புகழ்வார்கள். இன்று குடும்பத்திலும் பணியிடத்திலும் பிறரின் ஆதரவு கிடைக்கும். ஆக அரசியலில் உள்ளவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கை தரும். இன்று மாமனார் வீட்டில் இருந்து ஆதரவும், அமைதியை ஆதரவும் கிடைக்கும். சமூகம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். என்ற அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். அதனால் உங்கள் முயற்சிகளை அதிக படுத்த வேண்டிய நாள். 

கடக ராசி பலன் 

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று மனநிறைவு மற்றும் மன அமைதி கிடைக்கக்கூடிய நாள். அரசியல் துறையில் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இன்று அரசாங்கம் மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் அல்லது வியாபாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவால் படிப்பில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உண்டு. 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் உடல் நலம் மற்றும் மனநலம் மேம்படக்கூடிய நாள். இரண்டாம் சில சாதகமற்ற செய்திகள் கேட்க வாய்ப்பு உண்டு. இதனால் திடீர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. இன்று பணியிடத்திலும் குடும்பத்திலும் யாரிடமும் தகராறில் ஈடுபட வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். என்ற உங்கள் வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நிம்மதியை தரும். வேலை தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று மதிப்பெண் சில பொருட்களை இலக்க நேரிடும் அல்லது திருடப்பட வாய்ப்பு உண்டு. அதனால் முக்கிய ஆவணங்களை கவனமாக வைத்திருக்கவும். உங்கள் பிள்ளைகளின் கல்வி அல்லது விளையாட்டுப் போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம். இது குடும்பத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள எந்த ஒரு . வேலையும் இன்று முடிக்க வாய்ப்பு உண்டு. மாலை நேரத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உண்டு. இன்று சூழல் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகள் தொடர்பான விஷயத்தில் சிறிய கவலை ஏற்படும். குடும்பத்தில் பதற்றத்தை அனுபவிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக நடந்து கொள்ளவும். உடற்பயிற்சி தியானம் செய்ய தவறாதீர்கள். உங்களின் நிதானமான அணுகுமுறை உறவுகளை மேம்படுத்தும். இன்று குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. தொழில் செய்யக்கூடிய நபர்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசி செந்தவர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். உங்களின் செயல்பாடு கௌரவத்தை அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளின் விருப்பத்தையும் அவர்களின் அடிப்படை பொறுப்புகளை நிறைவேற்ற வாய்ப்பு உண்டு. உங்களுடைய பயணம் இனிமையானதாகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.மாணவர்கள் படிப்பில் சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. படிப்பில் திட்டமிடல் தேவைப்படும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்களின் இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு மரியாதையை பெற்று தரும். கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறலாம். இன்று நாள் முழுவதும் வேலை பளு அதிகமாக இருக்கும் என்பதால் அதை முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று எதிரிகளின் தொந்தரவு நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு. நிதானமான அணுகுமுறை அவசியம். இன்று சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். 

மகர ராசி பலன் 

மகர ராசி சேர்ந்தவர்கள் இன்று சில அசௌகரியங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு. உடல்நல பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை சந்திப்பது அவசியம். இன்று உங்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான முயற்சிகளில் ஆர்வத்தை காட்டுவீர்கள். இன்று சில முக்கிய வேலைகளையும் முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். வீட்டில் இருந்து கிளம்பும்போது விநாயகரை வழிபாடு செய்து செல்வது நல்லது. 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று வேலை வாய்ப்பு மற்றும் வணிகம் தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகளை கிடைக்கும். நாளின் பிற்பகுதி சட்ட தகராறு அல்லது வழக்கு விஷயங்களில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சியை தரும். இன்று நீங்கள் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடர்பான புதிய திட்டங்கள் எதிர்பார்த்த நல்ல பலனைத் தரும். இன்று வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

மீன ராசி பலன் 

மீன ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று இனிமையான சூழல் உருவாகும். இதனால் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலையை முடிப்பதோடு பணம் தொடர்பான சில முக்கிய பரிவர்த்தனைகளில் ஈடுபடுவீர்கள். இன்று போதுமான அளவு கையிருப்பு தொகை உங்களுக்கு மன நிறைவை தரும். இன்று எதிரிகளை எளிதாக வெல்ல முடியும். பக்தி மற்றும் இறை வழிபாடு உங்கள் மனதை இதயத்தை அதிகரிக்கும். சில நாட்களாக இருந்த தொந்தரவுகள் விலகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

Mobitel 1278