Header Logo
SLIC
பல்சுவை
ஆபாச படங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்!

Feb 11, 2026 - 12:45 PM

ஆபாச படங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஏ.ஐ., டீப்பேக் மூலமாக தயாரிக்கப்படும் ஆபாச படங்களுக்கு இந்திய மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 

செயற்கை நுண்ணறிவு என்னும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலமாக உருவாக்கப்படும் சட்டவிரோதம், ஏமாற்றும் தன்மை கொண்டது, பாலியல் சுரண்டல், அனுமதியில்லா உள்ளடக்கம், போலி ஆவணங்கள், குழந்தை பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கம், வெடிகுண்டுகள், ஆள்மாறாட்டம் போன்றவற்றுடன் தொடர்புடைய படங்கள்,வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியாகி வேகமாக பரவுகின்றன. 

இதனை தடுக்க இந்திய மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் வெளியாகி உள்ளநிலையில் அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

புதிய விதிமுறைகளின்படி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் மற்றும் டீப்பேக் போன்ற உள்ளடக்கங்களை கையாள்வதில் ஆன்லைன் தளங்களுக்கு அரசு கூடுதல், கடுமையான பொறுப்புகளை விதித்துள்ளது. 

அதன்படி எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில், தகுதியான அதிகாரிகள் அல்லது நீதிமன்றங்கள் குறியிடும் செயற்கை உள்ளடக்கங்களை 3 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்காக, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இல் செய்யப்பட்ட திருத்தங்களை அரசு அறிவித்துள்ளது. இவ்விதிகளில், ஏ.ஐ. மற்றும் டீப்பேக் உள்ளடக்கங்களுக்கு முதன்முறையாக தெளிவான வரையறை அளிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் வரும் 20 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. 

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அரசிதழில் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர் புகார் தீர்வு தொடர்பான காலக்கெடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278