Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
தெற்காசியாவின் டிஜிட்டல் எதிர்காலம்: தனியுரிமை அடிப்படையில் உருவான புதிய சமூக ஊடகத்தின் வருகை

Feb 11, 2026 - 05:24 PM

தெற்காசியாவின் டிஜிட்டல் எதிர்காலம்: தனியுரிமை அடிப்படையில் உருவான புதிய சமூக ஊடகத்தின் வருகை
Mobitel inner

தெற்காசியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பெரும்பாலும் வெளிநாட்டு சமூக ஊடக தளங்களின் அடிப்படையிலே நிகழ்ந்தது. இணையத்திற்கான அணுகல் விரிவடைந்தது இளைஞர்கள் இணையத்தை பாவிக்க ஆரம்பித்தனர்.‌ ஆனால் அந்த இணைப்பு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் சமூக மரியாதை என்ற அடிப்படைகளில் அமைந்ததா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. 

இப் பின்னணியில், இந்தியாவில் உருவான ZKTOR என்ற புதிய சமூக ஊடக தளம், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் அதன் பொது பீட்டா கட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகிறது. இந்தியா மற்றும் நேபாளத்தில் ஏற்கனவே பொது பீட்டா சோதனையில் இருக்கும் இந்த தளம், தென்னாசியாவில் தனியுரிமை அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் “all-in-one” சமூக ஊடக கட்டமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ZKTOR-இன் முக்கிய தனித்தன்மை அதன் வடிவமைப்பிலேயே காணப்படுகிறது. பயனர் தரவு சேகரிப்பை மையமாக்கிய பழைய சமூக ஊடக மாதிரிகளுக்கு மாறாக, இது zero- knowledge server architecture, பல அடுக்குகளான குறியாக்கம் மற்றும் உள்ளடக்க பாதுகாப்பு அமைப்புகளை அதன் அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டுள்ளது. இதனால் பயனர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்கள் அனுமதியின்றி அணுகப்படுவதற்கான வாய்ப்பு கட்டமைப்பிலேயே குறைக்கப்படுகிறது. 

இந்த அணுகுமுறை, குறிப்பாக பெண்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் மரியாதை தொடர்பான பிரச்சினைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கை உட்பட தெற்காசியாவின் பல நாடுகளில், பெண்கள் ஒன்லைன் வெளியில் தங்களை வெளிப்படுத்துவதில் இன்னும் தயக்கம் காணப்படுகிறது. பாதுகாப்பு ஒரு “கொள்கை (policy)” அல்ல, ஒரு “வடிவமைப்பு‌ (design)” ஆக இருக்க வேண்டும் என்ற பார்வை, இந்த இடத்தில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்குகிறது. 

ZKTOR-இன் வடிவமைப்பை வழிநடத்துபவர் சுனில் குமார் சிங் ஆவார். இவர் பின்லாந்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலதிகமாக வாழ்ந்து ஸ்காண்டினேவிய சமூகங்களில் தனியுரிமை மற்றும் சமத்துவம் எப்படி தொழில்நுட்ப கட்டமைப்புகளில் இணைக்கப்படுகிறது என்பதை நேரடியாகக் கற்றவர். அந்த அனுபவத்தையும், இந்திய சமூகத்தின் பன்மொழி மற்றும் பண்பாட்டு தன்மையையும் இணைத்ததே ZKTOR-இன் அடிப்படையாகும். 

இந்த தளம் எந்த வெளிநாட்டு venture capital முதலீட்டையும் அல்லது அரசுத் துணையையும் ஏற்காமல் உருவாக்கப்பட்டிருப்பது, அதன் நீண்டகால சுயாதீனத்தை பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

இலங்கை மற்றும் வங்கதேசத்தில் ZKTOR-இன் பீட்டா அறிமுகம், ஒரு புதிய சமூக ஊடகத்தை மட்டுமல்லாது, தெற்காசியாவின் டிஜிட்டல் சுயமரியாதை குறித்த கலந்துரையாடலினை உருவாக்குகிறது.


MOST READ

காணொளி
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

Mobitel Upahara