Header Logo
SLIC
உலகம்
துருக்கி பாராளுமன்றத்தில் கைகலப்பு!

Feb 12, 2026 - 01:12 PM

துருக்கி பாராளுமன்றத்தில் கைகலப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

துருக்கியின் அமைச்சரவையில் மறுசீரமைப்பை அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் மேற்கொண்டார். இதில் அரசாங்க தலைமை சட்டத்தரணி அகின் குர்லெக்கை புதிய நீதி அமைச்சராக நியமித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் பாராளுமன்றத்தில் அகின் குர்லெக் அமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தபோது எதிர்க்கட்சி எ எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அகின் குர்லெக்கின் பதவி பிரமாணத்தை தடுக்க முயற்சித்தனர். இதனால் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. 

ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவியது. 

மோதலில் ஈடுபட்டவர்களை பாதுகாவலர்கள் தடுத்தனர். மோதல் ஏற்பட்டபோதிலும் அகின் குர்லெக் மந்திரியாக பதவி ஏற்று கொண்டனர். அவரை சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278