வணிகம்
Prime Lands Residencies தனது The Colombo Border திட்டத்தில் Tower Cosmos டவர் பணிகளை பூர்த்தி செய்து முக்கிய மைல்கல்லை எ

Feb 12, 2026 - 01:34 PM -

0

Prime Lands Residencies தனது The Colombo Border திட்டத்தில் Tower Cosmos டவர் பணிகளை பூர்த்தி செய்து முக்கிய மைல்கல்லை எ

Prime Lands Residencies PLC முன்னெடுக்கும் The Colombo Border அபிவிருத்தித் திட்டத்தில் அடங்கியுள்ள மூன்று வதிவிட டவர்களில் ஒன்றான Tower Cosmos இன் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து, உரிய காலப்பகுதிக்கு முன்னதாகவே முக்கிய மைல்கல்லை எய்தியுள்ளது. 20 மாடிகள் கொண்ட இந்தத் தொகுதியின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதன் மூலம், நிறுவனத்தின் பொறியியல் சிறப்பு மற்றும் ஒழுக்கமான செயல்திட்ட முன்னெடுப்பு ஆகியன மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இந்தப் பூர்த்தியை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா, இந்தத் தொகுதியின் நிர்மாண காலப் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக அமைந்துள்ளதுடன், Tower Cosmos இன் நிர்மாணப் பணிகளின் பூர்த்தியை குறிப்பதுடன், உள்ளக அலங்காரப் பணிகளை ஆரம்பிப்பதற்கான சமிக்கையாகவும் அமைந்துள்ளது. 20 மாடிகள் கொண்ட இந்தத் தொகுதியில், 152 இல்லங்கள் அடங்கியிருக்கும். ஒவ்வொரு அலகும் 2 படுக்கை அறைகளைக் கொண்டதாக இருக்கும். 2027 டிசம்பர் மாதமளவில் சகல பணிகளும் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தற்போது Tower Cosmos இன் சகல அலகுகளும் விற்றுத் தீர்த்துள்ளன. 

Prime Group இன் உள்ளக நிர்மாணப் பிரிவான Prime Construction (Pvt) Ltd இனால் உரிய காலப்பகுதிக்கு முன்னதாகவே இந்த நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுக் கையளிக்கப்பட்டதன் மூலம், நிறுவனத்தின் ஒன்றிணைந்த செயல்திட்ட முன்னெடுப்பு ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. Prime இன் நிர்மாண அணியினரின் பல மாத கால ஒன்றிணைந்த முயற்சிகள் இந்தப் பணி பூர்த்தியடைந்துள்ளமையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதுடன், திட்டமிடல் முதல் நிறைவேற்றல் வரை இந்தத் திட்டத்தை வழிநடத்தியிருந்த துறைசார் நிபுணர்கள் குழுவின் அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

The Colombo Border செயல்திட்டமானது, கட்டடக் கலைஞர் அனில் குமாரேக, கட்டமைப்புப் பொறியியலாளர் லக்ஷி கூரே, MEP ஆலோசனைக் குழு மற்றும் நாயல் ஜோசப் தலைமையிலான NJ ஆலோசனைக் குழு உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த தொழில் முனைவு நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சியான் ஐயிங்க கட்டமைப்பு மறுஆய்வு ஆலோசகராகவும், அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நலின் டி சில்வா புவித் தொழில்நுட்ப பொறியியல் சேவைகளை வழங்கும் நிபுணராகவும் பங்களிப்பு வழங்குகின்றனர். இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, நிர்மாணச் செயல் முறை முழுவதும் தொழில்நுட்ப துல்லியம், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் கட்டமைப்பின் உறுதித்தன்மை என்பவற்றை உறுதிப்படுத்தியுள்ளது. 

Tower Cosmos நிர்மாணப் பணிகள் Prime Construction (Pvt) Ltd இனால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் பாரிய அபிவிருத்தித் திட்டமானது ஒரு மூலோபாய கூட்டாண்மை மாதிரியை (Strategic partnership model) பிரதிபலிக்கின்றது. Tower Amaḍa நிர்மாணப் பணிகளும் Prime Construction (Pvt) Ltd நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், Tower Brielle நிர்மாணப் பணிகள் Sanken Construction (Pvt) Ltd நிறுவனத்துடனான இணைந்த ஒத்துழைப்பின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. இது இத்துறையிலுள்ள முன்னணி பங்காளர்களுடன் இணைந்து திறம்பட செயற்படுவதற்கான Prime நிறுவனத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. 

கொழும்பு - கண்டி வீதியில் 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள The Colombo Border, நவீன கட்டிடக்கலை வடிவமைப்பையும் வியூக ரீதியான நகர அமைவிடத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டமானது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் முக்கிய வர்த்தக வலயங்களுக்கு இலகுவான போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதுடன், அமைதியான குடியிருப்புச் சூழலையும் உறுதிப்படுத்துகின்றது. இங்குள்ள மூன்று டவர்களும் உயர்தரமான உட்புற அலங்காரங்கள், நவீன வசதிகள் மற்றும் பிரத்தியேக வாழ்க்கைமுறை அம்சங்களுடன் குடியிருப்பாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ள நிலையில், The Colombo Border திட்டம், அனுபவம் வாய்ந்த நிபுணத்துவத்துடன் கூடிய உயர்தர வாழ்க்கை முறையை எதிர்பார்க்கும் வீட்டுத் தேடுபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்தும் பாராட்டைப் பெற்று வருகின்றது. வியூக ரீதியான அமைவிடம், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நம்பகமான கட்டுமானச் செயல்முறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பானது, இத்தகைய குடியிருப்புக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் Prime நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இத்திட்டம் பறைசாற்றுகின்றது. The Colombo Border மற்றும் காணப்படும் வதிவிடங்கள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு www.primeresidencies.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும். 

Prime Lands Residencies PLC பற்றி 

Prime Lands Residencies PLC ஒரு பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் அபிவிருத்தி நிறுவனமாகும். இது இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்பிற்குரிய சொத்து அபிவிருத்திக் குழுமங்களில் ஒன்றான Prime Group இன் அங்கமாகும். 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த பின்னணிக் கண்டறிவும், இலங்கை முழுவதும் 70-க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வரலாறும் கொண்ட Prime Group, தரம், நம்பகத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் ஒப்படைத்தல் ஆகியவற்றில் சிறந்த நற்பெயரைப் பெற்றுள்ளது. 

Prime Group இன் குடியிருப்பு அபிவிருத்திப் பிரிவான Prime Lands Residencies PLC, வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நீண்டகால மதிப்பை வழங்கும் வகையில், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் உயர்தரமான வாழ்விடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன், The One Collection எனும் பிரத்தியேகத் தொகுப்பின் மூலம் வழங்கப்படும் அதிநவீன குடியிருப்புத் திட்டங்களையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இது வடிவமைப்பில் அதன் பன்முகத்தன்மையையும், பிரீமியம் நகர்ப்புற வாழ்வியலில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05