Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
செலான் டிக்கிரி, முதன்முறையாக நாடெங்கிலும் நிதிக் கல்வியறிவு நிகழ்ச்சிகளுடன் சிறுவர்களை வலுப்படுத்துகிறது

Feb 12, 2026 - 01:38 PM

செலான் டிக்கிரி, முதன்முறையாக நாடெங்கிலும் நிதிக் கல்வியறிவு நிகழ்ச்சிகளுடன் சிறுவர்களை வலுப்படுத்துகிறது
Mobitel Inner 1278

நாட்டின் முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி, தொடர்ச்சியாக 12ஆவது வருடமாக நாடு தழுவிய நிகழ்ச்சிகளுடன் உலக சிறுவர் மாதத்தை (WCM) கொண்டாடியது. இலங்கையில் வங்கியொன்றால் உலக சிறுவர் மாதத்திற்காக நாடெங்கிலும் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்ட முதல் முறை இதுவாகும். இக் கொண்டாட்டங்களில் இளம் சிறுவர்களுக்கு நிதிக் கல்வியறிவின் அத்தியாவசியங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 

சேமிப்பு, செலவு மற்றும் முதலீட்டில் அடிப்படை இடர் முகாமைத்துவம் போன்ற முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி செலான் டிக்கிரி, சிறுவர்களுக்கு நடைமுறைக்கு உகந்த பணப் பழக்கங்களை அறிமுகப்படுத்தியது. இம் முயற்சிகள், சிறுவர்களின் வாழ்க்கைக்கு மதிப்புச் சேர்ப்பதோடு ஆரம்பத்திலிருந்தே பொறுப்பான, தொலைநோக்கு சிந்தனை மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டன. நிதிக் கல்வியை மேலும் தொடர்புபடுத்தக்கூடியதாகவும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற்றுவதற்காக தெரண 24x7 TV மற்றும் கெப்பிட்டல் TV உடன் இணைந்து உருவாக்கப்பட்ட நடனம் மற்றும் பாடல்களை உள்ளடக்கிய செயற்பாடுகள் இம் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த உதவின. 

நிதிக் கல்வியறிவுடன் செலான் டிக்கிரி, Child Protection Force என்னும் சிறுவர் பாதுகாப்பிற்கான அமைப்புடன் இணைந்து “பாதுகாப்பான மற்றும் வலிமையான சிறுவர்கள் - சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியது. சிறுவர் பாதுகாப்பிற்கான வர்த்தக நாமத்தின் உறுதிப்பாட்டை இந்த இணைவு நிரூபித்தது. இதன் போது, சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகர்கள் ஆன்லைனிலும் சமூகத்திலும் சிறுவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது தொடர்பான வழிகாட்டல்களை வழங்கினர். 

இந்த WCM நடவடிக்கைகள் செலான் வங்கியின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பஹசர நூலகப் பாடசாலைகளில் இடம்பெற்றன. சிறுவர்களையும் அவர்களின் கல்வியையும் ஊக்கப்படுத்தல் என்னும் செலான் டிக்கிரியின் பரந்த நோக்கத்துடன் இணைந்த பஹசர திட்டம், பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந் நூலகங்கள், சமூகங்களுக்கு திறம்பட சேவை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும், இது நாடெங்கிலும் உள்ள டிக்கிரி கணக்கு வைத்திருப்பவர்களை ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு இடத்தில் ஒன்றிணைத்தது. 

இந்த முயற்சி குறித்து செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன கருத்து தெரிவிக்கையில், “அன்புடன் அரவணைக்கும் வங்கியாக, எங்கள் சிறுவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். உலக சிறுவர் மாதம் மற்றும் அதற்கு அப்பால், நெறிமுறையான மற்றும் பொறுப்பான நிதி நடைமுறைகள் குறித்து சிறுவர்களின் புரிதலை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். சேமிப்பானது தேசத்தை வலுப்படுத்தும் அதே வேளை அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் என்பதை வெளிப்படுத்துவதே இதன் குறிக்கோள். சிறுவர்களுக்கு அத்தியாவசியமான நிதியறிவு மற்றும் பாதுகாப்புத் திறன்களை வழங்குவதற்கான அதன் முயற்சிகளை செலான் டிக்கிரி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. என்றார். 

இம் முயற்சிகளின் நேர்மறையான விளைவுகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியதுடன் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. வலுவான சேமிப்புப் பழக்கங்களை வளர்ப்பது, பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் சிறுவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை ஆதரிப்பது ஆகியவற்றில் செலான் டிக்கிரியின் 37 ஆண்டுகால அர்ப்பணிப்பை உலக சிறுவர் மாதம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

சிறுவர்களுக்கு ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமான பணப் பழக்கத்தை கடைப்பிடிக்க உதவுவதில் செலான் டிக்கிரி தொடர்ந்து உறுதியாக உள்ளது. இதன் பொருட்டு, நிதிக் கல்வியறிவை எளிமையாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றும் அனுபவங்களை வழங்குகிறது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான டிக்கிரி கணக்கைத் திறப்பதன் மூலம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் இப் பயணத்தை ஆதரிக்க முடியும். இது தொடர்ச்சியான சேமிப்பை ஊக்குவிக்கும் அதேவேளை சலுகைகளைப் பெறவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. 

கணக்கை ஆரம்பிக்க எந்தவொரு செலான் வங்கிக் கிளையையும் விஜயம் செய்யலாம் அல்லது 200 88 88 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278