Header Logo
SLIC
பல்சுவை
திருமணத்திற்கு முன் நாகினியாக மாறிய இளம்பெண்?

Feb 12, 2026 - 01:49 PM

திருமணத்திற்கு முன் நாகினியாக மாறிய இளம்பெண்?
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (ஔரையா) மாவட்டம், சிங்கனூர் (சிங்கன்பூர்) கிராமத்தில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால், பொலிஸ் விசாரணையில் அது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பது தெரியவந்துள்ளது. 

ரீனா என்ற இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் அவர் அறையிலிருந்து வெளியே வராததால், பெற்றோர் சந்தேகம் அடைந்து அறைக்குள் சென்று பார்த்தனர். 

அங்கு ரீனா இல்லை. ஆனால், அவரது ஆடைகள், வளையல்கள், குங்குமம் போன்ற பொருட்கள் படுக்கையில் அடுக்கப்பட்டிருந்தன. அருகில் ஐந்தடி நீளமுள்ள பாம்பின் உரித்த தோல் (snake skin அல்லது கென்சுலி) கிடந்தது. 

அண்மைக் காலமாக ரீனா, தூங்கும்போது பாம்பு தன்னைச் சுற்றிக் கொள்வதாக பெற்றோரிடம் கூறி வந்திருந்தார். இதனால், பெற்றோரும் கிராம மக்களும் அவர் இச்சாதாரி நாகினியாக (விருப்பப்படி உருமாறும் பாம்புப் பெண்) மாறிவிட்டார் என்று நம்பினர். 

இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. மக்கள் வீட்டுக்குள் செல்லவே பயந்தனர். அதிர்ச்சியடைத்த பெற்றோர், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அவர்கள் உடனடியாகவே இது இயற்கைக்கு மாறானது அல்ல என்று தெரிவித்தனர். பாம்பின் உரித்த தோலும், ஆடைகளும் யாரோ திட்டமிட்டு அடுக்கி வைத்திருப்பது போலத் தெரிந்தது. 

ரீனாவிடம் தனி மொபைல் இல்லை என்று பெற்றோர் கூற, அவர்களது போனைப் பெற்று சோதித்த பொலிஸார், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு அடிக்கடி அழைப்புகள் சென்று வந்ததை கண்டறிந்தனர். 

அந்த எண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடையது என்பது தெரியவந்தது. அவரும் காணாமல் போயிருந்தார். இதனை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். 

ரீனாவும் அந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் ரீனாவுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்திருந்தனர். இதைத் தவிர்க்க, கடந்த மூன்று மாதங்களாக ரீனா பாம்பு தன்னைச் சுற்றுவதாக நாடகமாடி வந்துள்ளார். 

சில நாட்களுக்கு முன், வயல் பகுதியில் பாம்பின் உரித்த தோலைத் தேடியதை கிராமத்தினர் கவனித்திருந்தனர். 

கடந்த 08 ஆம் திகதி இரவு, பெற்றோர் தூங்கிய பின்னர், ரீனா திட்டமிட்டபடி தனது ஆடைகள், வளையல்கள், குங்குமம் ஆகியவற்றை படுக்கையில் வைத்து, பாம்பின் உரித்த தோலை அருகில் அடுக்கி வைத்துவிட்டு, காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார். 

பொலிஸார் இப்போது ரீனாவையும் அவரது காதலனையும் தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


MOST READ
08
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM


காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278