Header Logo

இந்தியா
ரஃபேல் விமான கொள்வனவுக்கு இந்திய பாதுகாப்பு குழு அனுமதி

Feb 12, 2026 - 07:49 PM -

0

ரஃபேல் விமான கொள்வனவுக்கு இந்திய பாதுகாப்பு குழு அனுமதி

பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் இந்தியாவிற்கு வருகைதரவுள்ள நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

தயார்நிலையில் உள்ள 18 விமானங்கள் தற்போது வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலின் ஒப்புதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும். 

இந்த விமானங்களை கொள்வனவு செய்வதன் மூலம் இந்தியாவின் மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 176-ஆக உயரவுள்ளது. 

இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு 26 கடற்படை ரக விமானங்களுக்கான முற்பதிவுகளையும் இந்திய கடற்படை வழங்கியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title