Header Logo
SLIC
மலையகம்
ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி வழிபாடு!

Feb 13, 2026 - 11:03 AM

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி வழிபாடு!
Mobitel Inner 1278
EDEX Inner

தேயிலைக் கொழுந்தினைப் பறித்து, கரடுமுரடான கரங்களைத் தொட்டுப்பார்த்து, ஆதங்கத்தோடு தொழிலாளர்களின் நிலையைக் கேட்டறிந்த ஜனாதிபதியை இதுவரை காலத்தில் நாங்கள் கண்டதில்லை. கடந்த காலத்தில் பல போராட்டங்களுக்கும் மத்தியிலேயே எங்களுடைய சம்பள அதிகரிப்பை, அதுவும் சிறிய தொகையை மலையக அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுத்தனர். 

ஆனால், எவ்வித போராட்டமும் இன்றி இன்று 400 ரூபாய் சம்பளத்தை அதிகரித்துத் தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதண்டி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

சம்பள உயர்வினைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி, தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். 

லெதண்டி தோட்ட ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இன்று (13) காலை பொங்கல் வைத்து விசேட வழிபாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 

இதன்போது பேசிய தொழிலாளர்கள், "நல்லாட்சி காலத்தில் 50 ரூபாய் தருவதாகக் கூறி, பின்னர் அதைக்கூட கொடுக்காது ஏமாற்றினார்கள். ஆனால் இப்போது போராட்டம், வேலைநிறுத்தம் ஏதுமின்றி 400 ரூபாய் அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

மேலும், இதுவரை காலமும் யாரும் தேயிலை மலைகளுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து நலன் விசாரித்தது இல்லை. அந்த நிகழ்வைக் காணொளியில் பார்த்து நெகிழ்ந்து போனோம்," எனவும் தெரிவித்தனர்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278