Header Logo

இந்தியா
சரியான நேரத்துக்குள் வந்த விஜய்!

Feb 13, 2026 - 01:11 PM -

0

சரியான நேரத்துக்குள் வந்த விஜய்!

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தில் விஜயைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

ஓமலூர் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தவெக தலைவர் விஜய் வந்த நிலையில், ஏராளமான தொண்டர்கள் சாலையில் காத்திருந்து ஆதரவு தெரிவித்தனர். 

எனினும் சரியாக 12.25 மணிக்குள் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜய் வந்தடைந்தார். 

தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஓமலூர் விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் வளாகத்துக்கு வர அரை மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், மிகச் சரியாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார் விஜய். 

ஏற்கனவே, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே இன்று நடைபெறும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார். 

ஆனாலும் ஏராளமானோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

title