Header Logo

வடக்கு
சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி மீனவர்கள் போராட்டம்!

Feb 13, 2026 - 03:00 PM -

0

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி மீனவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (13) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். 

முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு சிறுதொழில் மீனவர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அனுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்களுடன் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு வருகைதந்து போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரரினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர். 

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளதாகவும், சுமார் 71 km இற்கும் அதிகமாக கடல் உள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுவதாகவும், தற்போதய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதாகும் என தெரிவித்துடன், எமது மாவட்டத்தில் மீன்பிடி துறை பிரச்சனையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சனை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டகாரர்களின் கோரிக்கையினை தாம் அரசாங்கத்திற்கு அனுப்புவதாகவும் அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீனவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title