Header Logo
SLIC
மலையகம்
9 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையைத் திருடிய நபர் கைது!

Feb 13, 2026 - 03:53 PM

9 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையைத் திருடிய நபர் கைது!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் சுமார் 9 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகததாசவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரால் திருடப்பட்ட 9 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூலிபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர் நகையைத் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து, அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278