Header Logo

செய்திகள்
ஓரிரு துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

Feb 15, 2026 - 09:37 PM -

0

ஓரிரு துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கம் இது குறித்து புரிதலுடன் இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

"தேசிய பாதுகாப்பிற்கு விசேட பாதிப்பு எதுவும் இல்லை. வெவ்வேறு குழுக்களுக்கு கடந்த காலத்திலும் கலகங்களை விளைவிப்பது, இனவாதத்தைத் தூண்டுவது போன்ற விடயங்கள் பழக்கப்பட்டிருந்தது. இப்படியானவர்கள் தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளத் தேவைப்படும்போது பல்வேறு விடயங்களைச் செய்ய முயற்சிக்கின்றனர். 

ஆனால் முப்படையினரும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதாக நான் நினைக்கிறேன். 

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது. பதற்றமடையத் தேவையில்லை. அரசாங்கம் எப்படியும் இதனைப் புரிந்துகொண்டிருக்கும். 

இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஓரளவுக்குப் புரிதல் உள்ளது. எனவே அவர்களால் இதனை தற்போது முகாமைத்துவம் செய்ய முடிந்திருக்கும் என நான் நினைக்கிறேன். 

பாதாள உலகம் ஓரளவுக்கு இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு அரசியல் குற்றமல்ல. பாதாள உலகம் செயற்பட்ட இடமாகும். பாதாள உலகம் 100 வீதம் ஒடுக்கப்படவில்லை என்பது எமக்குத் தெரியும். 

மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது முழு இராணுவத்தையும் கொழும்பிற்குள் இறக்கினாலும் தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அரசாங்கம் ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title