Header Logo

செய்திகள்
பல துறைகளில் அபிவிருத்தி முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடிவு

Feb 15, 2026 - 11:55 PM -

0

பல துறைகளில் அபிவிருத்தி முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடிவு

சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதற்கமைய, 50 மில்லியன் டொலர் முதல் 300 மில்லியன் டொலர் வரையிலான முதலீடுகளுக்கு இந்த வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன. 

குறித்த முதலீட்டின் மூலம் குறைந்தது 50 உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய முதலீடுகளுக்கு 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிறுவன வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 

அதற்கு மேலதிகமாக, அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title