Feb 17, 2026 - 05:59 PM -
0
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட மிகப்பெரிய உணவு உற்பத்திப் பெருநிறுவனமான CBL குழுமம், சமையல் கலையின் சிறப்பு, படைப்பாற்றல் மற்றும் உள்நாட்டு திறமைசாலிகளைக் கொண்டாடும் வகையில் MasterChef ஸ்ரீலங்காவுடன் பிரதான அனுசரணையாளராக கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டாண்மையின் ஓர் அங்கமாக, CBL குழுமத்தின் மிகச்சிறந்த சமையல் வர்த்தக நாமமான ளுநசய உத்தியோகபூர்வ சமையல் பங்காளராகச் செயற்படும். மசாலா மற்றும் உப்பு முதல் தேங்காய்ப்பால் மற்றும் நூடில்ஸ் போன்ற இதன் பரந்துபட்ட தயாரிப்புக்கள் MasterChef இன் சமையலறைக்குத் தரம், பல்பயன்பாடு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றைக் கொடுக்கும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விரும்பப்படும் பரந்துபட்ட பிஸ்கட் தயாரிப்புக்களை வழங்கும் இலங்கையின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரும், நாட்டின் முன்னணி பிஸ்கட் வர்த்தக நாமமுமான மஞ்சி, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உத்தியோகபூர்வ பிஸ்கட் பங்காளராக இணைந்துள்ளது. அத்துடன், குவேச்சர் சொக்லெட், கொம்பவுண்ட் சொக்லெட், ஃபில்லிங்ஸ் மற்றும் அலங்காரத்திற்கான தீர்வுகள் எனப் பரந்துபட்ட தயாரிப்புக்களை வழங்கும் இலங்கையின் முதல்தர சொக்லெட் வர்த்தக நாமமான றிட்ஸ்பெரி உத்தியோகபூர்வ சொக்லெட் பங்காளராக இணைந்து துறைசார் சொக்லெட் நிபுணத்துவத்தின் ஊடாக கலைத்துவத்தை அதிகரிக்க உதவுகின்றது. இதன் மூலம் உயர்தரத்திலான பரந்துபட்ட தயாரிப்புக்களுக்கான குழுமத்தின் பலம் வெளிக்காட்டப்படுவதுடன், MasterChef போட்டியாளர்களுக்கு சிறந்த சமையல் அனுபவமும் கிடைக்கிறது.
கின்னஸ் உலக சாதனை மற்றும் 70ற்கும் அதிகமான பிராந்தியங்களில் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ள MasterChef நிகழ்ச்சி உலகில் மிகவும் வெற்றிகரமான சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இலங்கைப் பதிப்புக்காக தேசிய ரீதியில் திறமையான சமையல் கலைஞர்கள் தேடப்பட்டு வருவதுடன், இவர்கள் இலங்கையில் நடைபெறவிருக்கும் முதலாவது MasterChef ஸ்ரீலங்கா சம்பியன் பட்டத்தைப் பெறுவதற்காக கடுமையான சவால்களை எதிர்கொள்வார்கள்.
பிஸ்கட்ஸ், சொக்லெட்ஸ், தின்பண்டங்கள், தானிய உணவுகள், ஊட்டச்சத்து மற்றும் இயற்கை உணவு போன்றவற்றில் பலமான நிலையிலும், மாசாலா, உப்பு மற்றும் தேங்காய்பால் போன்ற சமையலுக்குத் தேவையான பரந்துபட்ட தயாரிப்புக்களை வழங்குவதிலும் CBL குழுமத்தின் செயற்பாடு இலங்கையிலிருந்து எல்லைதாண்டியதாக அமைந்துள்ளது. கானா, இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. அறுபத்தைந்திற்கும் அதிகமான சந்தைகளுக்கான வலுவான ஏற்றுமதியின் மூலம் தரமான இலங்கை உணவுத் தயாரிப்புக்களை உலக சந்தைக்குக் கொண்டு செல்வதில் குழுமத்தின் ஈடுபாடு பறைசாற்றப்படுகின்றது.
இந்தக் கூட்டாண்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த குழுமத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் ஷேயா விக்ரமசிங்க குறிப்பிடுகையில், “நாம் யார் என்பதன் மையமாக உணவு காணப்படுகின்றது. உயர் தரத்திலான உணவு வர்த்தக நாமங்களைக் கட்டியெழுப்புவதும், சிறந்த இலங்கை உணவுத் தயாரிப்புக்களை உலகிற்கு எடுத்துச் செல்வது குறித்தே CBL குழுமத்தில் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம். திறமையான துறைசார்நிபுணர்களுக்கு தாயகமாக விளங்கும் குழும நிறுவனம் என்ற ரீதியில், மனிதர்கள் தமக்கான முக்கியத்துவம் மற்றும் சிறப்பை வெளிப்படுத்துவதற்கான தளங்களை உருவாக்குவதில் நாம் உறுதியா நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். இந்த நம்பிக்கையுடன் ஒத்துப் போகும் வகையிலேயே MasterChef ஸ்ரீலங்கா நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம். இலங்கையின் சமையல் கலையில் திறமையாளர்களை வலுவூட்டும் அதேநேரம், திறமை, கட்டுக்கோப்பு மற்றும் படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கான தளமாகவும் இது அமைகின்றது. இலங்கையின் வர்த்தக நாமங்களை சர்வதேச சந்தைக்கு நாம் எடுத்துச் செல்லும்போது, இந்தக் கூட்டாண்மையானது இலங்கையின் உணவின் சிறப்பைக் காட்சிப்படுத்துவதற்கு உதவியாக அமையும். இந்தப் பயணத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்வதையிட்டு நாம் பெருமைகொள்கின்றோம்” என்றார்.
இந்தக் கூட்டண்மையை வரவேற்றுக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்காவின் தயாரிப்பாளரும், ரியாலிட்டி ரிவி தயாரிப்பின் இணை ஸ்தாபகரும், திட்டத்தின் தலைவருமான அஜித் கம்லத், “ஸ்ரீலங்கா நிகழ்ச்சிக்குப் பிரதான பங்காளராக CBL குழுமத்தை வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மஞ்சி, சேரா மற்றும் றிட்ஸ்பெரி போன்ற நம்பகமான வர்த்தகநாமங்களின் ஊடாக இலங்கையின் சமையத்துறையின் பயணத்தில் ஆழமான புரிதலை CBL குழுமம் ஏற்படுத்துகின்றது. இந்த வர்த்தக நாமங்களே வீட்டில் சமையல் செய்யும் நபர்களுக்கும், தொழில்முறை சமையல் கலைஞர்களுக்கும் இணைந்த உணர்வைக் கொடுப்பவையாக அமைவதுடன், எங்கள் உணவுக் கலாசாரத்தின் வளம் மற்றும் பல்வகைத் தன்மையையும் கொண்டாடுகின்றன” என்றார்.
மில்லியன் கணக்கான மக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய அளவில் அனுபவிக்கும் நம்பகமான உணவு வர்த்தக நாமங்களுடன், CBL குழுமம் தரம், பத்தாக்கம் மற்றும் நோக்கம் என்பவற்றினால் இலங்கையின் உணவுத் துறையைத் தொடர்ந்தும் வடிவமைக்கின்றது.

