Header Logo
SLIC
பல்சுவை
'காதலர் தினம்' கொண்டாடிய பின் மனைவியை கொன்ற கணவன்!

Feb 18, 2026 - 12:10 PM

'காதலர் தினம்' கொண்டாடிய பின் மனைவியை கொன்ற கணவன்!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). 

இவரின் கணவர் அன்ஷுல் தவான், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று திருமணம் நடைபெற்றது. 

மஹக் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதி தம்பதியினர் குருகிராமிலிருந்து அன்ஷுலின் சொந்த ஊரான ஹிசாரிற்கு சென்றுள்ளனர். 

அங்கு காதலர் தினத்தை அவர்கள் கொண்டாடிவிட்டு, அடுத்த நாள் பிப்ரவரி 15 ஹன்சியில் உள்ள மஹக்கின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 

அன்று மாலை 7 மணி அளவில் இருவரும் மீண்டும் குருகிராமிற்கு காரில் புறப்பட்டுள்ளனர். 

ஆனால், வழியில் ஜஜ்ஜார் அருகே உள்ள பசோளர் கிராமத்தின் அருகே ஒரு ஒதுக்குப்புறமான பாதையில் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் பொலிஸிற்கு தகவல் கொடுத்துள்ளார். 

அன்ஷுல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது. 

தீவிர விசாரணைக்குப் பிறகு அன்ஷுல் தானே மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 

தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அன்றைய தினம் காரில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 

தடயங்கள் சிக்காமல் இருக்க கையுறைகளை அணிந்து இக்கொலையைச் செய்துள்ளார். பொலிஸார் அன்ஷுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278