Header Logo

வடக்கு
அர்ச்சுனா எம்.பியின் காணியால் மக்களுக்கு தொந்தரவா?

Feb 20, 2026 - 06:53 PM -

0

அர்ச்சுனா எம்.பியின் காணியால் மக்களுக்கு தொந்தரவா?

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் பெரியவிளான் பகுதியில் உள்ள, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டப்பட்டது. 

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (20) நடைபெற்றது. இதன்போது பெரியவிளான் வட்டார உறுப்பினரான எட்வேட் மரியவாசினி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பெரியவிளானில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து பாம்புகள் வெளியே வந்து அருகில் இருக்கின்ற மக்களின் குடிமனைகளுக்குள் செல்கின்றது. இதனால் மக்கள் தினம்தினம் அச்சத்தில் வாழ்கின்றனர். 

ஒவ்வொரு நாளும் ஆறு ஏழு பாம்புகள் அங்கிருந்து வெளி வருகின்றன. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன், 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்களுக்கு இடையூறாக காணியை வைத்திருப்பது தவறான விடயம். அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்காக விடப்போவதில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை அவரது காணிக்கான சிவப்பு அறிவித்தலை காட்சிப்படுத்தப்போகின்றோம் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title