Header Logo
SLIC
பல்சுவை
நாயால் நின்றுபோன திருமணம்!

Feb 20, 2026 - 07:22 PM

நாயால் நின்றுபோன திருமணம்!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி, தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 18 ஆம் திகதி கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் மாலைமாற்றும் சடங்கு உள்ளிட்ட சில திருமண சடங்குகள் நிகழ்ந்துள்ளது. மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மண்டபத்திற்கு வந்துள்ளனர். 

மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது சிறிது தூரத்தில் கட்டப்பட்டிருந்த மணமகள் வீட்டு செல்லநாயான 'சிக்ஸர்' குறைத்துள்ளது. 

சடங்குநேரத்தில் குறைத்துக் கொண்டிருந்ததால் மணமகன் வீட்டார் நாயை அடித்துள்ளனர். இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

வாய்மோதல் கைகலப்பாக மாற இரு தரப்பினரும் நாற்காலிகள் மற்றும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மணமகள் உட்பட சுமார் 8 பேர் காயமடைந்தனர். மணமகளுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, மேலும் மணமகள் தரப்பைச் சேர்ந்த சிலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது. மணமகன் தரப்பைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

மோதல் குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பேசியுள்ளனர். அப்போது கருணை இல்லாத குடும்பத்தில் தன்னால் வாழ முடியாது எனக் கூறி மணமகள் திருமணத்தை நிறுத்தக் கூறியுள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரும் சீர் வரிசைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சமரசமாகப் பிரிந்து சென்றனர். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ஜோடி ஏற்கனவே காதலர்கள். ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்திருந்த நிலையில், முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்ட சடங்கின் போது இந்த விபரீதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278