Header Logo
SLIC
மலையகம்
வட்டவளையில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி!

Feb 21, 2026 - 11:25 AM

வட்டவளையில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் வட்டவளைப் பகுதியில் சுமார் 15 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது, லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் லொறி கடுமையாகச் சேதமடைந்ததுடன், அதன் ஓட்டுநர் வாகனத்தினுள்ளேயே சிக்கிக்கொண்டார். அவரை மீட்பதற்காக வட்டவளை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து சுமார் ஒன்றரை மணிநேரம் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த சமயம் லொறியில் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மீட்கப்பட்ட ஓட்டுநர் 1990 'சுவசெரிய' அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278