Header Logo
SLIC
பல்சுவை
முன்னாள் மனைவிக்கு காரை பரிசளித்த ஹர்திக் பாண்டியா!

Feb 23, 2026 - 10:54 AM

முன்னாள் மனைவிக்கு காரை பரிசளித்த ஹர்திக் பாண்டியா!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்திய அணியின் முன்னனி சகலத்துறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நடாஷாவிற்கும், அவரது மகன் அகஸ்தியாவிற்கும் சுமார் ரூபா 4 கோடி மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். 

மும்பையில் உள்ள ஷோரூமில் இந்த காரை நடாஷா மற்றும் அவரது மகன் அகஸ்தியா பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

காரின் பின்னால் 'தந்தையிடமிருந்து அகஸ்தியாவிற்கு ஒரு பரிசு' என்ற வாசகம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்மூலமே இது ஹர்திக் வழங்கும் பரிசு என தெரியவந்தது. ஹர்திக் பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் நீண்டநாட்களாக காதலித்து வந்தநிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி 2024 இல் பிரிந்தது. இருவரும் பிரிந்திருந்தாலும், மகனை மாறிமாறி கவனித்து வருகின்றனர். 

விவாகரத்துக்குப் பின் மாடலிங் துறையில் உள்ள மஹிகா ஷர்மா என்பவரை ஹர்திக் காதலித்து வருகிறார். இந்தவாரம் கூட காதலியின் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது. கடந்தாண்டு நடாஷா தனக்கென ரூ.3.04 கோடி மதிப்பிலான ஆரஞ்சு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278