Header Logo
SLIC
பல்சுவை
கள்ளக்காதலால் பறிபோன உயிர்!

Feb 23, 2026 - 11:52 AM

கள்ளக்காதலால் பறிபோன உயிர்!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுநல்லூர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் வெளியானதால், 28 வயது இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இறந்தவரின் கணவர் கார்த்தி (30) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் பிரியங்கா (28) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயது பெண் குழந்தையும், 5 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். கார்த்தி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். 

கார்த்தி வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா, அக்கம் பக்கத்தினருடன் பழகி வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. 

முருகனுக்கு ஏற்கனவே ஜோதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. கார்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் முருகன் பிரியங்காவுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். 

இதை அறிந்த முருகனின் மனைவி ஜோதி, கணவரை கண்காணித்தபோது இந்த தகாத உறவு தெரிய வந்தது. கோபமடைந்த ஜோதி, இதைப் பிரியங்காவின் கணவர் கார்த்தியிடம் தெரிவித்தார். 

இருவரும் சேர்ந்து முருகனையும் பிரியங்காவையும் கண்டித்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த உறவை கைவிடுமாறு வலியுறுத்தினர். 

அப்போது பிரியங்கா, ஜோதியிடம் அசிங்கமாக பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. 

தன்னுடைய தகாத உறவு விஷயம் பொதுவெளியில் தெரிந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறான முடிவை செய்து கொண்டார். மனைவியின் உடல் தொங்கிக் கொண்டிருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்த கார்த்தி, உடனடியாக சோமங்கலம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சோமங்கலம் பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278