Header Logo
Mogo Academy

பல்சுவை
பாடசாலைகளுக்கு அருகே இறைச்சி விற்பனைக்கு தடை

Feb 24, 2026 - 10:39 AM -

0

பாடசாலைகளுக்கு அருகே இறைச்சி விற்பனைக்கு தடை
Mobitel inner

இந்தியாவின் பீகாரில் பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்துள்ளார். 

நேற்று (23) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

சிறுவர்களிடையே வன்முறைப் குணம் உருவாவதைத் தடுப்பது, பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாப்பது, சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை தவிர்ப்பது, பொது இடங்களில் தூய்மையைப் பராமரித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார். 

மேலும், மக்களின் உணவு விருப்பங்களுக்கு அரசு எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட விஜய் குமார் சின்ஹா, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், சமூக கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறினார். 

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பீகார் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மற்ற இடங்களில், இறைச்சிக் கடைகள் பொதுமக்களின் பார்வையில் நேரடியாகப் படாதவாறு திரைகள் அல்லது கண்ணாடி பேனல்கள் மூலம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara