Header Logo
SLIC
பல்சுவை
பரீட்சை எழுதபோன இடத்தில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி

Feb 27, 2026 - 05:51 PM

பரீட்சை எழுதபோன இடத்தில் குழந்தை பெற்ற 10 ஆம் வகுப்பு மாணவி
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதபோன இடத்தில் 17 வயது மாணவி குறைமாத குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் கடந்த 24 ஆம் திகதி கணிதம் பரீட்சை நடந்தது. அப்போது, 17 ஆவது மாணவி ஒருவர் திடீரென எழுந்து வாஷ் ரூம் சென்றுள்ளார். 

வாஷ் ரூம் சென்ற அவர் நீண்ட நேரம் பரீட்சை எழுதும் அறைக்கு திரும்பவில்லை. இதனால் பெண் ஆசிரியர் வாஷ் ரூம் சென்று பார்த்துள்ளார். அப்போது, மாணவிக்கு குறைமாத குழந்தை பிறந்து, அந்த குழந்தை அழுதியபடி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

உடனடியாக பாடசாலையில் வேலைப் பார்க்கும் பணியாளர்களை அழைத்து, அந்த மாணவியை குழந்தையுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வைத்தியர்கள் இரண்டு உயிர்களையும் காப்பாற்றினர். இருவரும் தற்போது நலமாக உள்ளனர். 

17 வயது மாணவி என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாணவி ஒரு மாணவன் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த மாணவன் இது குறித்து யாரிடம் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். இதனால் தனது பெற்றோரிடம் கர்ப்பம் அடைந்தது தொடர்பாக கூறாமல் இருந்துள்ளார். அதனடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278