Header Logo

செய்திகள்
அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

Mar 3, 2026 - 08:35 AM -

0

அமெரிக்கப் பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஈரானுக்கு எதிராக இன்னும் பாரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

தெஹ்ரானின் அணுஆயுத ஏவுகணைத் திட்டத்தை முறியடிப்பதற்காக, ஈரானின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த மோதல்கள் நான்கு அல்லது ஐந்து வாரங்கள் வரை நீடிக்கும் என முன்னர் மதிப்பிடப்பட்ட போதிலும், அதற்கு அதிக காலம் எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title