Header Logo

செய்திகள்
மத்திய கிழக்கின் போர்ச் சூழல் - எதிர்க்கட்சித் தலைவர்கள் விசேட கலந்துரையாடல்

Mar 3, 2026 - 08:24 AM -

0

 மத்திய கிழக்கின் போர்ச் சூழல் - எதிர்க்கட்சித் தலைவர்கள் விசேட கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை பாராளுமன்றத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

இதேவேளை, மார்ச் மாதத்தின் முதலாவது வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. 

இன்றைய தினம் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. 

நாளை (04) நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்று வரும் 5ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title