Header Logo

செய்திகள்
பிரித்தானியா மற்றும் ஸ்பெயினை கடுமையாகச் சாடினார் ட்ரம்ப்!

Mar 4, 2026 - 02:18 PM -

0

பிரித்தானியா மற்றும் ஸ்பெயினை கடுமையாகச் சாடினார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கு போரின் போது பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் செயற்பட்ட விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 

வெள்ளை மாளிகைக்கு வருகை தந்திருந்த ஜேர்மனிய ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் உடனான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.

 

“ஸ்பெயின் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. பிரித்தானியாவும் அவ்வாறே செயற்படுகிறது. பிரித்தானியாவின் நிலைமை அதைவிட மோசமானது. இது சர்ச்சிலின் காலம் அல்ல. பிரித்தானியா எந்த உதவியும் செய்யவில்லை.”

 

தாம் ஈரானைத் தாக்குவதைத் தாமதப்படுத்தியிருந்தால், அவர்கள் அமெரிக்காவைத் தாக்கத் தயாராக இருந்திருப்பார்கள் என ட்ரம்ப் மேலும் வலியுறுத்தினார். 

 

இதேவேளை, ஈரான் தற்போது பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், இப்போது அதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

"நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். நாம் முதலில் தாக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக இருந்தது. அவர்கள் எம்மைத் தாக்கவிருந்தார்கள். நாம் அவ்வாறு தாக்காதிருந்தால், அவர்கள் முன்கூட்டியே எம்மைத் தாக்கியிருப்பார்கள். அதை நான் நன்றாக உணர்ந்தேன். எம்மிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் படி, அவர்கள் முதலில் தாக்குதலுக்குத் தயாராவதாகவே எனக்குத் தோன்றியது. அதற்கு என்னால் இடமளிக்க முடியாது.

 

புதிதாக பதவியேற்கும் தலைவர் முன்னையவரை விட மோசமானவராக இருந்தால் என்ன செய்வது? அவ்வாறு நடப்பதை நான் விரும்பவில்லை. ஈரான் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போதைக்கு வெளியே சென்று போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறியுள்ளோம். ஏனெனில் தற்போதைய சூழல் மிகவும் அபாயகரமானது," என ட்ரம்ப் விரிவாக விளக்கமளித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title