Header Logo

ஏனையவை
மதுசார பாவனையாளர்களர், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் தாக்கம்!

Mar 5, 2026 - 11:45 AM -

0

மதுசார பாவனையாளர்களர், பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் தாக்கம்!

இலங்கையில் மதுசாரம் புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பயன்பாடு அனைத்து சமூக மட்டங்களிலும் பொருளாதார, சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஏனையவர்களின் மதுசார பாவனை பெண்களுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. 

பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்திலும் மதுசார பாவனையாளர்களால் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஆகியவை தொடர்பாக விரைவாக கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

இத்தகைய பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள ஒரு கட்டமைப்பு இல்லாதமையின் காரணமாக, பல பெண்கள் இது தொடர்பாக பேசுவதற்குத் தயங்குபவர்களாக இருக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. பொது இடங்களில் மதுசார பாவனையாளர்களால் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் தாக்கங்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் நோக்கில், 2026 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) நாடளாவிய ரீதியில் ஆய்வொனறினை மேற்கொண்டது. 

இந்த ஆய்வானது இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கு மேற்பட்ட 1157 பெண்களிடம் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டது. மதுசார பாவனையாளர்களால் பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தீவிரத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், அத்தகைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பயனுள்ள தலையீடுகளை மேம்படுத்துவதற்கு ஆதரவாக ஆதாரங்களை உருவாக்குவதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!