Header Logo
Mogo Academy

பல்சுவை
காப்பீடு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி!

Mar 9, 2026 - 03:17 PM -

0

காப்பீடு பணத்திற்காக கணவனை கொன்ற மனைவி!
Mobitel inner

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், கம்மம், காந்தி நகரை சேர்ந்தவர் ரவி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரசாந்தி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவி மது போதைக்கு அடிமையானதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ரவி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். 

இந்நிலையில் ரவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கணவர் விரைவில் இறந்து விடுவார் என கருதிய மனைவி கணவர் பெயரில் காப்பீடு செய்தார். காப்பீடு எடுத்து ஒரு ஆண்டு ஆகியும் ரவி இறக்கவில்லை. இதனால் காப்பீட்டு பணத்தை பெற கணவரை கொலை செய்ய பிரசாந்தி முடிவு செய்தார். 

அதன்படி ரவியின் உறவினரான சீனிவாஸ் அவரது நண்பர்களான ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை அணுகினார். 

அவர்களும் ரவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 2 ஆம் திகதி இரவு ரவியை அவரது ஆட்டோவில் கம்பம் - குரவி வீதியில் உள்ள எம்.பி. பாலம் அருகே அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து ரவியை மது குடிக்க வைத்தனர். மது போதை தலைக்கு ஏறிய ரவி வீதியில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தார். 

அப்போது ராஜ்குமார் தனக்கு சொந்தமான காரை வேகமாக ஓட்டி வந்து ரவி மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ரவியின் உடலை வீதி ஓரத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர். பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். ரவி வீதி விபத்தில் இறந்ததாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

பொலிஸார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ரவியின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸில் புகார் செய்தனர். பொலிஸார் சந்தேகத்தில் பேரில் பிரசாந்தியை பிடித்து விசாரணை செய்த போது காப்பீட்டு பணத்திற்காக காரை ஏற்றி கொலை செய்ததாக தெரிவித்தார். பொலிஸார் கொலை வழக்காக பதிவு செய்து பிரசாந்தி, ஸ்ரீனிவாஸ், ராஜ்குமார், வெங்கடேஷ், ராம் பாபு ஆகியோரை கைது செய்தனர்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara