Header Logo
SLIC
கிழக்கு
நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

Mar 9, 2026 - 06:11 PM

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!
Mobitel Inner 1278
EDEX Inner

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். 

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (09) நடைபெற்றது. 

குறித்த அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதிய தவிசாளருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். 

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹீர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் காதர் ஆசிரியர், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

மேலும் முன்னாள் தவிசாளராக செயற்பட்ட ஆதம்பாவா அஸ்பரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை அடுத்து ஏற்பட்ட தவிசாளர் பதவி வெற்றிடத்தை அடுத்து புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் பின்னர் நடைபெற்ற இரு அமர்வுகளிலும் பல காரணிகளால் புதிய தவிசாளர் தெரிவு நடைபெறவில்லை. 

அத்துடன் குறித்த பிரதேச சபையில் பல கட்சிகள் கொண்ட உறுப்பினர்கள் இருப்பதால் புதிய தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்ற விடயத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையின்மை ஏற்பட்ட நிலையில் இரு முறை புதிய தவிசாளருக்கான தெரிவு நடைபெறாது இழுபறியாகி வந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278