Header Logo
Mogo Academy

பல்சுவை
வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!

Mar 10, 2026 - 11:28 AM -

0

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!
Mobitel inner

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. 

கடந்த 28 ஆம் திகதி ஆரம்பித்த இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தங்களது நாடு மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்த போர் நீடித்து வருகிறது. 

இந்த போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் போதிய அளவில் பெற்றோல் - டீசல், சமையல் கேஸ் இருப்பு இருப்பதால் தற்போதைக்கு அதற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. 

ஆனால் பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் வினியோகம் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் கேஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

குறிப்பாக தொலைபேசிகளில் வணிக கேஸ் மற்றும் சமையல் கேஸ் ஆகியவற்றை முன்பதிவு செய்தால் 25 நாட்களுக்கு பிறகு தான் சிலிண்டர்கள் கிடைக்கும் என்று குறுஞ்செய்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், ஓட்டல்கள் நடத்துவோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். 

இயல்பு நிலை திரும்பும் வரை வணிக சிலிண்டர், சமையல் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று கேஸ் நிறுவனங்கள் கூறி உள்ளன. 

இதனால் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் செயல்படாது என்று அதாவது உணவகங்கள் வேலைநிறுத்தம் தொடங்குவதாக பெங்களூரு மாநகர உணவகங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

வளைகுடா போரால் உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. அளவில் சிலிண்டர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருகிறோம். மாற்று எரிசக்திகளை உபயோகப்படுத்தி கொள்ளுமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara