Header Logo

இந்தியா
இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி இராஜினாமா

Mar 11, 2026 - 12:23 PM -

0

இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி இராஜினாமா

இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), அதன் தலைமை நிர்வாக அதிகாரி  பீட்டர் எல்பர்ஸ் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

விமானிகளின் ஓய்வு மற்றும் பணி நேரக் கட்டுப்பாடுகளைச் சரியாகத் திட்டமிடத் தவறியதால், கடந்த டிசம்பரில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த திடீர் விலகல் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து சந்தையில் சுமார் 65% பங்குகளைக் கொண்டுள்ள இண்டிகோ, கடந்த டிசம்பரில் 4,500 விமானப் பயணங்களை ரத்து செய்தது. இது நிறுவனத்தின் 20 ஆண்டு கால வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியாகக் கருதப்படுகிறது.

விமானச் செயல்பாடுகள் மற்றும் நெருக்கடி மேலாண்மையில் போதிய மேற்பார்வை இல்லை என எல்பர்ஸை ஒழுங்குமுறை அதிகாரிகள் கண்டித்திருந்தனர். மேலும், இதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு 2.45 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக எல்பர்ஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் பாட்டியா  ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் டிசம்பர் மாத நிகழ்வுகளைக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

விமான ரத்துக்கள் மற்றும் மத்திய கிழக்கு போர் சூழலால் வான்வெளி மூடப்பட்டமை போன்ற காரணங்களால், இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 13.5% வீழ்ச்சியடைந்துள்ளன.

தற்காலிகமாக நிறுவனத்தின் பொறுப்புகளை ராகுல் பாட்டியா ஏற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.எம் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான எல்பர்ஸ், இண்டிகோ நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கத்திற்காக 500 ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ய பாரிய ஒப்பந்தங்களை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title