Header Logo

வணிகம்
கொமர்ஷல் வங்கி, டேவிட் பீரிஸ் ஓட்டோமோபைல்ஸ் நிறுவனத்துடன் பங்குடைமையில் இணைந்து GWM மற்றும் BAIC வாகனங்களுக்கான கவர்ச்சிகரமான லீசிங் திட்டங்களை வழங்கு

Mar 11, 2026 - 01:11 PM -

0

கொமர்ஷல் வங்கி, டேவிட் பீரிஸ் ஓட்டோமோபைல்ஸ் நிறுவனத்துடன் பங்குடைமையில் இணைந்து GWM மற்றும் BAIC வாகனங்களுக்கான கவர்ச்சிகரமான லீசிங் திட்டங்களை வழங்கு

கொமர்ஷல் வங்கியானது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, சிறந்த போக்குவரத்து வசதிகளை அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதற்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில், டேவிட் பீரிஸ் ஓட்டோமோபைல்ஸ் (David Pieris Automobiles (Pvt) Ltd) நிறுவனத்துடன் மூலோபாய பங்குடைமையொன்றை மேற்கொண்டுள்ளது. வங்கியானது இதன் மூலம், பின்னர் சந்தைப்படுத்தப்படும் GWM மற்றும் BAIC வாகன வரிசைகளை வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட லீசிங் திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கிறது. 

கொமர்ஷல் வங்கியானது இந்த ஒத்துழைப்பின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட GWM மற்றும் BAIC வாகன மொடல்களின் கொள்முதல் விலையில் ஒரு பகுதியை நிதியுதவி செய்வதற்காக, தனது நாடளாவிய ரீதியிலான கிளை வலையமைப்பு மூலம் லீசிங் வசதிகளை வழங்கும்.வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள், ஆவணக் கட்டணங்களில் சலுகைகள் மற்றும் முதல் ஆண்டிற்கான வருடாந்த கட்டணம் விலக்களிக்கப்பட்ட இலவச கடனட்டை போன்ற நன்மைகளைப் பெறுவார்கள். மேலும், தனிநபர்களின் வருமான முறைகளுக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் அட்டவணைகளை தனிப்பயனாக்க முடிவதால், வாகன உரிமை மேலும் நியாயமானதாகவும் எளிதாக நிர்வகிக்கக்கூடியதுமானதாக அமையும் என்று வங்கி தெரிவித்துள்ளது. 

டேவிட் பீரிஸ் ஓட்டோமோபைல்ஸ் மதிப்புமிக்க டேவிட் பீரிஸ் நிறுவனக் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவின், BAIC வாகன வரிசையில் BAIC X55, BAIC BJ30 மற்றும் BAIC BJ40 போன்ற மாதிரிகளையும், மேலும் GWM வரிசையில் Haval H6 HEV, H6 PHEV, H6 GT PHEV, TANK 300 HEV மற்றும் TANK 500 HEV போன்ற வாகனங்களையும் இலங்கையில் சந்தைப்படுத்துகிறது.இந்த நிறுவனம், நிதியுதவி சலுகைக்கு மேலதிகமாக, இலவச வாகன பதிவு மற்றும் தொழிலாளர் கட்டணமில்லா இரு சேவை பராமரிப்புகள் உள்ளிட்ட பல மதிப்பூட்டப்பட்ட நன்மைகளையும் வழங்கும். மேலும், இந்தப்பங்குடைமை, ஊக்குவிக்கப்படும் அனைத்து மாதிரிகளுக்கும் உற்பத்தியாளர் ஆதரவுடன் வழங்கப்படும் விரிவான உத்தரவாதங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. GWM ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் வாகன வரிசைகள், மாதிரியைப் பொறுத்து அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் அல்லது 200,000 கிலோமீட்டர் வரை இயந்திர உத்தரவாதத்தையும், மேலும் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் அல்லது 160,000 கிலோமீட்டர் வரை பேட்டரி உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன. இது நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் ஆறுதலை உறுதிப்படுத்துகிறது. இந்த ஊக்குவிப்பு சலுகையில் இடம்பெறும் BAIC மாதிரிகள், மூன்று ஆண்டுகள் அல்லது 100,000 கிலோமீட்டர் வரை இயந்திர உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. 

இந்த கூட்டு ஊக்குவிப்புத் திட்டமானது 2027 ஜனவரி 30 வரை நடைமுறையில் இருக்கும். இது, போட்டித்திறன் மிக்க மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட லீசிங் தீர்வுகளை வழங்குவதற்காக, நற்பெயர் பெற்ற வாகன விநியோகஸ்தர்களுடன் இணைந்து செயல்படும் கொமர்ஷல் வங்கியின் மூலோபாயத்தை பிரதிபலிக்கிறது. இலங்கையில் வாகன லீசிங் துறையில் முன்னோடியாக, புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் சிறப்புச் சலுகைகளுடன் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள, கவர்ச்சிகரமான மற்றும் நியாயமான தவணைமுறை கட்டமைப்புக்களை வழங்குவதில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. 

இது தொடர்பாக வங்கி தெரிவிக்கையில், இந்த பங்குடைமையானது, வாடிக்கையாளர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வகையில் முக்கியமானதாக இருக்கும் ஏனெனில் வழங்கப்படும் சிறப்பு வட்டி வீதங்கள் மற்றும் சலுகைகள், வருமான சுழற்சிகளுக்கேற்ப திருப்பிச் செலுத்தும் திட்டங்களை தகுந்த முறையில் அமைக்க உதவும். 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title